விஜய் கொடுக்க.. சமந்தா செடி நட.. தல தோனி தண்ணீர் விட.. தெறிக்குதுப்பா உங்க கிரியேட்டிவிட்டி!

சென்னை: நடிகர் மகேஷ் பாபுவின் சவாலை ஏற்று தளபதி விஜய் செடி நட்ட புகைப்படங்கள் நேற்று மாலை வெளியாகி வேற லெவலில் டிரெண்டாகி வருகிறது.

Recommended Video

Samantha Nargajuna Green India Challenge • Blissful Video

இந்நிலையில், தளபதி விஜய் ரசிகர்கள் அந்த புகைப்படங்களை எந்த அளவுக்கு மெருகேற்ற முடியுமோ மெருகேற்றியும் போட்டோஷாப்பில் விளையாடியும் வருகின்றனர்.

தல தோனி விஜய்யுடன் கார்ட்னிங் செய்வது போலவும், கோலி, சமந்தா, கீர்த்தி சுரேஷ் என பல பிரபலங்களையும் எடிட் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

சவால்னு வந்துட்டா

சவால்னு வந்துட்டா

தளபதி விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் செடி நடும் புகைப்படங்களை பதிவிட்டு, இது உங்களுக்காக மகேஷ் பாபு காரு என பதிவிட்டு, தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார். மகேஷ் பாபுவே எதிர்பார்க்காத நிலையில், தளபதி விஜய் இப்படி திடீரென புகைப்படங்களை வெளியிட்ட நிலையில், அவருக்கு நன்றி சொல்லி ட்வீட் போட ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

பிரபலங்கள் பாராட்டு

பிரபலங்கள் பாராட்டு

நடிகை மாளவிகா மோகனன், நடிகர் விவேக், சாந்தனு, அதுல்யா ரவி, இவானா, வில்லன் நடிகர் கபிர் சிங் துஹான் என பல பிரபலங்கள் தளபதி விஜய்யின் புகைப்படங்களை பார்த்து பாராட்டி ட்வீட்களை பறக்கவிட்டனர். ரசிகர்களும் ஏகப்பட்ட ஹாஷ்டேக்குகளை உருவாக்கி டிரெண்ட் செய்தனர்.

ரசிகர்கள் எடிட்

ரசிகர்கள் எடிட்

இந்நிலையில், தளபதி விஜய்யின் அந்த புகைப்படங்களை போட்டோஷாப்பில் வைத்து ஏகப்பட்ட எடிட்டிங் செய்து வெளியிட்டு வருகின்றனர் தளபதி ரசிகர்கள். ஏற்கனவே லாக்டவுனில் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் இளைஞர்கள், இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் சும்மாவா விடுவோம் என பக்காவாக எடிட் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

தண்ணி ஊத்தும் தல

தண்ணி ஊத்தும் தல

தளபதி விஜய் செடி நட தல தோனி தண்ணி ஊத்த என கிரியேட்டிவிட்டியை தெறிக்கவிட்டு எடிட் செய்துள்ள புகைப்படங்கள் சமூக வலைதளத்தை ஆக்கிரமிப்பு செய்து வருகிறது. தளபதி விஜய் செடி நடும் தோட்டத்திலேயே தல தோனி தண்ணீர் ஊற்றுவது போல இருக்கும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த புகைப்படத்தை காமெடி நடிகர் சதீஷ் தனத் ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து வாவ் போட்டுள்ளார்.

இது எப்படி இருக்கு?

இது எப்படி இருக்கு?

தளபதி விஜய் செடியை எடுத்துத் தர அதை வாங்கி நடிகை சமந்தா நடுவது போல இருக்கும் மற்றொரு எடிட் வேற லெவலில் லைக்குகளை அள்ளுகிறது. சதீஷ் ஷேர் செய்த அந்த போட்டோவுக்கு கீழே தளபதி ரசிகர்கள், விஜய்யுடன் சமந்தா இருக்கும் எடிட் செய்யப்பட்ட க்ரீன் இந்தியா சவால் புகைப்படத்தை பதிவிட்டு, இது எப்படி இருக்கு ப்ரோ? எனக் கேட்டு வருகின்றனர்.

விராத் கோலி

விராத் கோலி

வாத்தி கம்மிங் ஒத்தே என கேப்ஷன் போட்டு, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி செடிக்கு தண்ணீர் விடும் புகைப்படத்தை தளபதி விஜய்யின் செடி நடும் புகைப்படத்துடன் எடிட் பண்ண போட்டோவை இந்த ரசிகர் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார். விஜய் ரசிகர்களில் பாதி பேர் போட்டோ எடிட்டர்கள் தானா? என்ற கேள்வியும் சமூக வலைதளத்தில் எழுந்து வருகின்றன.

More from Filmibeat

Read more about: vijay dhoni samantha விஜய்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X