என்னய்யா இது, தல ரசிகர்களுக்கு வந்த சோதனை? #WakeUpSathyaJyothi

By Siva

Recommended Video

சோகத்தில் அஜீத் ரசிகர்கள் | மீடு பற்றி மோகன்லால்- வீடியோ

சென்னை: விஸ்வாசம் அப்டேட் கேட்டு கேட்டு தல ரசிகர்கள் ஓய்ந்துவிட்டனர்.

சிவா இயக்கத்தில் அஜித் அப்பா, மகன் என்று இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ள விஸ்வாசம் படம் பொங்கலுக்கு ரிலீஸாகிறது என்று அறிவித்தார்கள். அதன் பிறகு அப்டேட் கொடுக்க மாட்டேன் என்று இயக்குனரும், தயாரிப்பாளரும் அடம் பிடிக்கிறார்கள்.

பொங்கல் நெருங்குகிறது ஏதாவது அப்டேட் கொடுங்க என்று அஜித் ரசிகர்கள் தினமும் கேட்கிறார்கள்.

சத்யஜோதி பிலிம்ஸ்

சத்யஜோதி பிலிம்ஸ்

விஸ்வாசம் பற்றி அப்டேட் கொடுக்காத சிவா மற்றும் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் மீது அஜித் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். தல, தயவு செய்து இனி இந்த சிவா மற்றும் சத்யஜோதி பிலிம்ஸுடன் சேர்ந்து மட்டும் பணியாற்றாதீர்கள் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அப்பா அஜித்

அப்பா அஜித்

சிவாவிடம் அப்டேட் கேட்டால் பேபி அனிகா அப்டேட் கொடுத்துள்ளார். தான் அஜித், நயன்தாராவின் மகளாக நடித்துள்ளாக அனிகா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும் தான் படம் முழுக்க வருவதாகவும் அவர் கூறியுள்ளார். அனிகாவின் பேட்டி தல ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது. அனிகா பேட்டி வீடியோவை தல ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்கள்.

தர லோக்கல் பாட்டு

தர லோக்கல் பாட்டு

விஸ்வாசம் படத்தில் அப்பா அஜித் தர லோக்கல் பாட்டுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ளதாக அந்த பாடலின் டான்ஸ் மாஸ்டர் கல்யாண் தெரிவித்துள்ளார். அந்த பாட்டு ஆலுமா டோலுமாவை எல்லாம் தூக்கி சாப்பிட்டுவிடும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். வீ ஆர் வெயிட்டிங்.

வேண்டாம்

பொறுத்து பொறுத்து பொறுமையை இழந்த தல ரசிகர்கள் #WakeUpSathyaJyothi என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் டிரெண்டாக விட்டுள்ளனர்.

கெஞ்சல்

50 நாள் தான் இருக்கு, ஏதாவது அப்டேட் கொடுங்கய்யா

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X