மிஸ்சான வலிமை அப்டேட்.. மிஸ் ஆகாத அஜித்தின் 50வது பிறந்தநாள் கொண்டாட்டம்.. தெறிக்கவிடும் ரசிகர்கள்!
சென்னை: தல அஜித்தின் 50வது பிறந்தநாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
Recommended Video
கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்ப்பதற்காக வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கையும் இன்று வெளியிட வேண்டாம் என நடிகர் அஜித் கேட்டுக் கொண்டார்.
அதனால், தல ரசிகர்கள் ரொம்பவே அப்செட் ஆகி இருந்தாலும், நடிகர் அஜித்தின் பிறந்தநாளை இன்று சமூக வலைதளங்களில் வாழ்த்து மழைகளால் தெறிக்கவிட்டு கொண்டாடி வருகின்றனர்.

50வது பிறந்தநாள்
தமிழ் சினிமாவில் 'தல' என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகர் அஜித் குமாரின் 50வது பிறந்தநாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. 1971ம் ஆண்டு உழைப்பாளர் தினமான மே 1ம் தேதி பிறந்தார். உழைப்பின் சிகரமாகவே வாழ்ந்து வரும் நடிகர் அஜித் நடிப்பை தாண்டி ஏகப்பட்ட துறைகளிலும் தனது தனி முத்திரையை பதித்து வருகிறார்.

கொண்டாட்டங்களுக்கு தடை
கடந்த ஆண்டும் கொரோனா பரவல் பாதிப்பு இருந்த நிலையில், ரசிகர்கள் யாரும் தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என கேட்டுக் கொண்டார் நடிகர் அஜித். அதே போல இந்த ஆண்டும் தல அஜித்தின் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கும் படியாக வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வராது என்கிற அதிரடியான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

ரசிகர்கள் அப்செட்
கடந்த 2019ம் ஆண்டு விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என ஒரே ஆண்டில் அடுத்தடுத்து இரண்டு படங்களை கொடுத்து அசத்திய நடிகர் அஜித், மீண்டும் இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் நடித்து வரும் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அப்டேட் கூட இது வரையில் வெளியாகாத நிலையில், தல ரசிகர்கள் ரொம்பவே அப்செட் ஆகி உள்ளனர்.

தெறிக்கும் டிரெண்டிங்
வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அறிவித்தபடி இன்று வெளியாகி இருந்தால், உலகளவில் வலிமை ஃபர்ஸ்ட் லுக் ஹாஷ்டேக்கை அஜித் ரசிகர்கள் டிரெண்ட் செய்திருப்பார்கள். ஆனால், அதற்கு சற்றும் குறையாத அளவுக்கு தற்போது, #HBDThalaAjith என்ற ஹாஷ்டேக்கை தல ரசிகர்கள் தெறிக்கவிட்டு நடிகர் அஜித்தின் 50வது பிறந்தநாளை சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

தீபாவளிக்கு வருமா
தல அஜித்தின் வலிமை திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்காவது வெளியாகுமா? என்றும் மீண்டும் திரையரங்குகள் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் தீபாவளி சமையத்தில் தான் திறக்கப்படுமா? இல்லை வலிமை படமும் ஒடிடி தளத்தில் வெளியாகுமா? என ஏகப்பட்ட கேள்விகள் ரசிகர்கள் மனங்களில் எழுந்துள்ளன. ரசிகர்கள் கொண்டாடும் படமாக வலிமை உருவாகி உள்ள நிலையில், நிச்சயம் தியேட்டர்களில் தான் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications











