இதை பார்த்தும் அந்த பெண்ணுக்கு அஜித்தை திட்ட எப்படி மனசு வந்துச்சோ?: வைரல் வீடியோ
Recommended Video
சென்னை: லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவின் போது அஜித்தை திட்ட அந்த பெண்ணுக்கு எப்படித்தான் மனசு வந்துச்சோ என்று கூறி தல ரசிகர்கள் வீடியோ ஒன்றை ஷேர் செய்து வருகிறார்கள்.
லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு நாள் அன்று அஜித் தனது மனைவி ஷாலினியுடன் திருவான்மியூரில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் ஓட்டு போட்டார். காலையில் முதல் ஆளாக அவர் வாக்களித்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில் அஜித் வரிசையில் நிற்காமல் சென்று வாக்களித்த வீடியோ வெளியானது.

அஜித்
வரிசையில் நிற்காமல் சென்று வாக்களித்த அஜித்தை பெண் ஒருவர் திட்டிய வீடியோ வெளியானது. இதையடுத்து வரிசையில் நிற்காததற்காக அஜித் மன்னிப்பு கேட்ட வீடியோவை தல ரசிகர்கள் ஷேர் செய்துள்ளனர்.
திட்டு
வரிசையில் நிற்க முடியாமல் போனதற்காக அஜித் மன்னிப்பு கேட்டும் அவரை திட்ட அந்த பெண்ணுக்கு எப்படித் தான் மனசு வந்துச்சோ என்று அவரின் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தல
அஜித் ஓட்டு போட வந்த இடத்தில் நடந்த சம்பவம் என்று கூறி சர்ச்சை வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் வலம் வந்துள்ளது. வழக்கமாக வரிசையில் நிற்கும் அஜித் ஏன் இம்முறை இப்படி செய்தார் என்பது தெரியவில்லை.

வாக்குப்பதிவு
வழக்கமாக அஜித் ஓட்டு போட வந்தால் அவர் மக்களோடு மக்களாக வரிசையில் நின்றது பற்றி தான் பேசப்படும். ஆனால் இம்முறை அவர் வரிசையில் நிற்காதது, அவரின் கார் கதவை போலீஸ்காரர் ஒருவர் திறந்துவிட்டது குறித்து விமர்சிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











