காலையிலேயே ட்விட்டரை தெறிக்கவிட்ட தல ரசிகர்கள் #ViswasamTrailerFromToday
சென்னை: விஸ்வாசம் பட ட்ரெய்லர் இன்று மதியம் வெளியாகியுள்ளது.
சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ள விஸ்வாசம் படம் பொங்கலுக்கு ரிலீஸாகிறது. இந்நிலையில் ட்ரெய்லர் இன்று மதியம் 1.30 மணிக்கு வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. அறிவித்தபடி ட்ரெய்லர் வெளியானது.
ட்ரெய்லர் அப்டேட் கேட்டு கெஞ்சிய ரசிகர்கள் தற்போது பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
விஸ்வாசம்
இன்று விஸ்வாசம் ட்ரெய்லர் வெளியானது குறித்து அஜித் ரசிகர்கள் ட்வீட் செய்து வருகிறார்கள். இதனால் #ViswasamTrailerFromToday என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் இரண்டாவது இடத்தில் டிரெண்டாகியுள்ளது.
கொண்டாட்டம்
ட்ரெய்லரை தல ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அஜித்
ட்ரெய்லருக்காக அஜித் ரசிகர்கள் மரண வெயிட்டிங்கில் இருந்தனர். ட்ரெய்லர் வெளியான வேகத்தில் அது புது சாதனை படைத்துள்ளது.
சூர்யா ரசிகர்கள்
அப்டேட் கேட்டு கிடைக்காமல் போனால் அந்த வலி எப்படி இருக்கும் என்பது தல ரசிகர்களை போன்றே சூர்யா ரசிகர்களுக்கும் நன்கு தெரியும். இந்நிலையில் சூர்யா ரசிகர்கள் விஸ்வாசம் ட்ரெய்லர் வெளியீட்டுக்காக அஜித் ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











