“நமக்கு தல தான் முக்கியம்”.. ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அடித்த சிவகார்த்திக்கேயன்!
Recommended Video
சென்னை: சிவகார்த்திக்கேயன் நடித்துள்ள மிஸ்டர் லோக்கல் படத்தின் புரோமோசன் வீடியோ வெளியாகியுள்ளது.
ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திக்கேயன், நயன் தாரா நடித்துள்ள படம் மிஸ்டர் லோக்கல். வரும் வெள்ளியன்று ரிலீசாக உள்ள இப்படத்தின் புரோமோஷன் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அதில், ராதிகாவும், சிவகார்த்திக்கேயனும் பைக்கில் செல்கின்றனர். அப்போது தலையில் உள்ள ஹெல்மெட் குறித்து ராதிகா, 'ரோட்ல போறவங்க வர்றவங்க எல்லாம் என்னை ஒரு மாதிரியாக பார்க்கின்றனர்' என்று கூறுகிறார். அதற்கு சிவகார்த்திகேயன், 'கரெக்டாக இருந்தாலே நம்ம ஊருல ஒரு மாதிரிதான் பார்ப்பாங்க, நமக்கு 'தல' தான் முக்கியம்' என்று பதில் கூறுகிறார்.
இந்த காட்சியின் மூலம் ஹெல்மெட்டின் அவசியம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, 'தல' தான் முக்கியம் என்று அஜித் பற்றியும் பேசியுள்ளார் சிவகார்த்திக்கேயன். இதனால், இந்த வீடியோவிற்கு அஜித் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்து விட்டார் சிவகார்த்திக்கேயன்.


Click it and Unblock the Notifications











