தல எனக்கு பிடித்தவர்களில் ஒருவர் இல்லை என்ற ஆதியை கொண்டாடும் அஜித் ரசிகர்கள்

By Siva

சென்னை: தல எனக்கு பிடித்தவர்களில் ஒருவர் இல்லை என்று நடிகர் ஆதி தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருபவர் ஆதி. நல்ல நடிப்பு திறமை இருந்தும் முன்னணி ஹீரோ என்கிற அந்தஸ்து மட்டும் அவருக்கு இன்று வரை கிடைக்கவில்லை.

இருப்பினும் நம்பிக்கையுடன் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

ரசிகர்

உங்களின் அனைத்து படங்களும் எனக்கு மிகவும் பிடிக்கும். அதில் யாகாவாராயினும் நா காக்க தான் சிறந்தது. நீங்கள் தலயுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று ரசிகர் ஒருவர் ஆதியிடம் ட்விட்டரில் தெரிவித்தார்.

ஆதி

ரசிகரின் ட்வீட்டை பார்த்த ஆதியோ, தல எனக்கு பிடித்தவர்களில் ஒருவர் இல்லை.. அவர் தான் எனக்கு பிடித்தவர். அவர் படங்களில் நல்ல கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறேன் என்று தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.

அண்ணா

தல தான் தனக்கு பிடிக்கும் என்று கூறிய ஆதியை அஜித் ரசிகர்கள் வாழ்த்தியுள்ளனர்.

சூப்பர்

இந்த ட்வீட்டுக்காகவே ஆதியை மிகவும் பிடித்துள்ளதாக தல ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். அஜித்துடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு ஆதிக்கு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X