தல மீட்ஸ் தல.. தோனியுடன் ஏ.ஆர். ரஹ்மான்.. மகிழ்ச்சியில் இசைப்புயல் மகன் வெளியிட்ட வீடியோ பாருங்க!
சென்னை ஐபிஎல் திருவிழாவை ஆரம்பிக்கும் வகையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற Roar 26 விழாவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை உற்சாகப்படுத்த சிவகார்த்திகேயன், ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்ற நிகழ்ச்சிகள் களைகட்டின.
ஹுகும் பாடலுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், அனிருத்தின் பாராடைஸ் பட பாடலான "ஹாயா ஷெர்" மற்றும் விஜய்யின் விசில் போடு உள்ளிட்ட பாடல்கள் ஒலித்தன.

சிவகார்த்திகேயன் 60 வயசு ஆனாலும் தோனி சென்னை அணிக்காக விளையாட வேண்டும் என ரெக்வஸ்ட் பண்ண, போங்க பாஸ் இப்பவே சரியா விளையாட முடியல என தோனி பேசியதெல்லாம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளன. இந்நிலையில், ஏ.ஆர். ரஹ்மான் வீடியோ ஒன்றை ஏ.ஆர். அமீன் ஷேர் செய்துள்ளார்.
தல மீட்ஸ் தல: கிரிக்கெட் ஜாம்பவான் தோனியை சென்னை ரசிகர்கள் செல்லமாக தல என அழைத்து வருவது அனைவரும் அறிந்த ஒன்று தான். ஏ.ஆர். ரஹ்மானை இசைப்புயல் என்றும் பெரிய பாய் என்றும் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், தற்போது அவரது மகன் அப்பாவையும் தல என மாற்றிவிட்டார். "Thala meets Thala" என்கிற கேப்ஷன் உடன் அவர் வெளியிட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
ஏ.ஆர். ரஹ்மானுடன் தோனி: சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ரோர் 26 விழாவில் பங்கேற்று ஏ.ஆர். ரஹ்மான் கிரிக்கெட் வீரர்களை உற்சாகப்படுத்தினார். தோனியுடன் அவர் தனது குடும்பத்தினருக்கு வீடியோ கால் போட்டு பேசிய காட்சிகளை தான் தற்போது அமீன் ஷேர் செய்து ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார்.
ஐபிஎல் திருவிழா ஆரம்பம்: கடந்த சில வருடங்களாகவே ஐபிஎல் திருவிழா களைகட்டி வருகிறது. சென்னையில் நடைபெறும் போட்டிகளின் போது தனுஷ், சிவகார்த்திகேயன், லோகேஷ் கனகராஜ், த்ரிஷா, ஸ்ருதிஹாசன், நெல்சன், கவின், வரலட்சுமி சரத்குமார் என ஏகப்பட்ட பிரபலங்கள் ஸ்டேடியத்துக்கு வந்து மேட்ச் பார்த்தனர். கடந்த ஆண்டு யாரும் எதிர்பாராத வண்ணம் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதிய போட்டியை அஜித் குமார் வந்து கண்டு ரசித்தது மறக்க முடியாத ஐபிஎல் திருவிழாவாக மாறியது. இந்த முறை தேர்தல் நேரம் என்பதால் தளபதி விஜய் வர வாய்ப்பிருக்கா? என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











