பொங்கலோ பொங்கல்..தல பொங்கல் கொண்டாடும் திரைப்பிரபலங்கள்!

சென்னை : பொங்கல், அறுவடைத் திருநாளாக உலகமெங்கும் உள்ளவர்களால் கொண்டாடப்படுகிறது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற முதுமொழிக்கு ஏற்ப, பல சினிமா பிரபலங்கள் 2022ம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.

திருமணமான புதுமணப்பெண்ணிற்கு முதல் முதலாக வரும் தலை தீபாவளியைப் போன்று சிறப்புமிக்கது தலைப்பொங்கல். இந்த நல்ல நாளில் வாசலில் கோலமிட்டு, புதுபானையில் புத்தரிசி போட்டு சூரியனுக்கு படைப்பார்கள்.

இந்த ஆண்டு தலைப்பொங்கல் கொண்டாடும் பிரபலங்கள் யார் யார் என்று பார்க்கலாமா?

பொங்கலோ பொங்கல்

பொங்கலோ பொங்கல்

விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரௌடிதான் படத்தில் நடித்த போது விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கும் காதல் தீ பற்றிக்கொண்டது. அந்த பின் பல ஆண்டுகளாக காதல் ஜோடியாக இருவரும் வலம் வந்தனர். இதையடுத்து, ஜூன் மாதம் 9ந் தேதி மகாபலிபுரத்தில் இவர்களின் திருமணம் வேத மந்திரங்கள் ஓத மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,ஷாருக்கான், அட்லி,அனிருத், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி என பலர் கலந்து கொண்டனர். இவர்களுக்கு கடந்த அக்டோபர் 9ந் தேதி வாடகைத்தாய் முறையில் இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. இந்த ஜோடிக்கு வரும் பொங்கல் தலைப்பொங்கலாகும்.

தல பொங்கல்

தல பொங்கல்

மரகத நாணயம் படத்தில் ஆதி நடிகை நிக்கி கல்ராணி இணைந்து நடித்த போது இருவரும் காதலிக்கத் தொடங்கினர். இதையடுத்து இருவரின் குடும்பத்தின் சம்மதத்துடன் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இவர்களது திருமணம் மே மாதம் தடபுடலாக நடந்தது. இதில் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் கலந்துகொண்டனர். இவர்களின் திருமண போட்டோக்கள் இணையத்தில் மிகப்பெரிய அளவில் டிரெண்டானது.

திருமண பந்தத்தில் இணைந்த புதுஜோடி

திருமண பந்தத்தில் இணைந்த புதுஜோடி

நவசர நாயகன் கார்த்தியின் மகனான நடிகர் கௌதம் தேவராட்டம் படத்தில் நடிகை மஞ்சிமா மோகனுடன் இணைந்து நடித்த போது காதலித்தனர். இதையடுத்து, இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த நவம்பர் 28ஆம் தேதி இருவருக்கும் பெற்றோரின் சம்மதத்துடன் மிகவும் எளிமையாக திருமணம் நடைபெற்றது. கௌதம் கார்த்திக் மற்றும் நடிகை மஞ்சிமா மோகன் தம்பதியும் இந்த ஆண்டு தலை பொங்கலை கொண்டாட உள்ளனர்.

ரவீந்தரன் - மகாலட்சுமி

ரவீந்தரன் - மகாலட்சுமி

தயாரிப்பாளர் ரவீந்தரன் மற்றும் சின்னத்திரை நடிகை மகாலட்சுமிக்கும் செப்டம்பர் 1ந் தேதி திருப்பதியில் திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணம் சோஷியல் மீடியாவையே திணற அடித்தது என்று சொல்லும் அளவுக்கு இருவரும் ஹாட் ஆப் தி கப்பிளாக இருந்தனர். எந்த பக்கம் திரும்பினாலும் இவர்கள் பற்றிய பேச்சுத்தான் இருந்தன. தற்போது இந்த தம்பதிகள் இணையத்தில் தினம் தினம் விதவிதமான ரொமான்டிக் போட்டோவை ஷேர் செய்து வருகின்றனர். இந்த தம்பதியும் தலைபொங்கலை கொண்டாட உள்ளனர்.

More from Filmibeat

Read more about: kollywood cinema pongal
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X