முட்டி மோதும் தல-தளபதி ரசிகர்களுக்கு ஆர்.ஜே. பாலாஜியின் அட்வைஸ்....

By Siva

சென்னை: எப்பொழுது பார்த்தாலும் சண்டை போடும் தல, தளபதி ரசிகர்களை நினைத்து ஆர்.ஜே. பாலாஜி வருத்தப்பட்டுள்ளார்.

நடிகர் ஆர்.ஜே. பாலாஜி ட்விட்டரில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளித்தார். தல, தளபதி ரசிகர்களின் ஓயாத சண்டை, அரசியல்வாதிகளின் நடவடிக்கைகள் வரை பல கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அதன் விபரம் இதோ,

தளபதி ரசிகர்கள்

விஜய்-அஜீத் ரசிகர்கள் சண்டை போடுவதற்கு ஏதாவது அட்வைஸ் பண்ணுங்க என்று ஒருவர் கூறினார். அதற்கு பாலாஜி, ஒரு வீடியோ பார்த்தேன் அதில் ஒருவர் எனக்கு பொண்டாட்டியை விட தல தான் முக்கியம் என்கிறார். ஒரு 100 பசங்க எங்கள் சாமி விஜய்யே என்று கூறி மாலை போட்டு தீபாராதனை பண்ணுவதை பார்த்தேன். தெரியல, நான் அட்வைஸ் பண்ணனுமா, அவங்க அப்பா, அப்பா, மனைவி அட்வை பண்ணனுமா, அந்த ஸ்டார்ஸ் பண்ணனுமான்னு தெரியல. ஆனால் ரொம்ப கஷ்டமாக இருந்தது என்றார்.

அரசியல் தலைவர்கள்

2017 பற்றி என்ற கேள்விக்கு பாலாஜி கூறியதாவது, இந்த வருஷம் உருப்படாத, அய்யய்யோ என்று ஃபீல் பண்ண வச்ச வருஷம். யார் காரணம் என்றால் நம்மை சுற்றியிருந்த அரசியல் தலைவர்கள், அரசியல் நிகழ்வுகள் அதன் பிறகு கண்ட்றாவி கூத்துக்கள். கூவத்தூர் நாடகங்கள் மாதரி. நாம் மகிழ்ச்சியாக இல்லை, வெட்கப்படுகிறோம். இது எல்லாம் அவர்களுக்கு இல்லையா என்றால் இல்லையே. அவர்கள் நம்மை பற்றி கவலைப்படாமல் படத்திற்கு பிரச்சனை செய்து கொண்டிருந்தார்களே. 2018ம் ஆண்டு நல்ல ஆண்டாக இருக்கட்டும் என்றார்.

தப்பு

அரசியலுக்கு வரும் ஆசை உண்டா என்று பாலாஜியிடம் கேட்கப்பட்டது. நமக்கு ஆசை இருக்கு, இதாக வேண்டும் அதாக வேண்டும் என்பதற்காக எல்லாம் அரசியலுக்கு வரக் கூடாது. அந்த மாதிரி யார் வந்தாலுமே தப்பு தான். மக்கள் விரும்பினால் வரலாம். வெறும் தேர்தலில் நிற்பது அரசியல் கிடையாது. சின்ன சின்ன நல்ல விஷயங்களுக்கு காரணமாக இருந்தால் அதுவும் அரசியல் தான் என்றார்.

பணமதிப்பிழப்பு

நான் பாஜக கிடையாது. கருப்பு பணத்தை ஒழித்துவிடுவார்களோ, இந்தியா உருப்பட்டுவிடுமோன்னு பணமதிப்பிழப்பை ஆதரித்தேன். அப்புறம் தான் உண்மை தெரிந்தது. நான் நூல் அணியவில்லை. என் வீட்டில் 6 ஜாதி, 2 மதம் இருக்கிறது என்று பாலாஜி கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X