ரஜினியின் அரசியல் என்ட்ரி.. தல தளபதி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் உற்சாக வரவேற்பு!
சென்னை: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் அரசியல் வருகை அறிவிப்பைத் தொடர்ந்து தல அஜித் மற்றும் தளபதி விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வரவேற்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பாக்ஸ் ஆபிஸ் தொடர்பாக ரசிகர்களுக்கு இடையே மோதல்கள் வெடித்தாலும், மற்ற நேரங்களில் ஒருத்தரை ஒருத்தர் விட்டுக் கொடுக்காமல் ஆதரவு அளித்து வருவது வரவேற்கத்தக்கது.
#இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல என்கிற ஹாஷ்டேக்கையும் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

ரஜினி வழியில்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படங்களை பார்த்து சினிமாவுக்குள் நுழையும் நடிகர்கள், ரஜினிகாந்தின் தாக்கம் இல்லாமல் நடிக்க மாட்டார்கள். தளபதி விஜய் மற்றும் தல அஜித்தும் ஏகப்பட்ட படங்களில் ரஜினிஸத்தை பின் பற்றி உள்ளனர். இருவரும் ரஜினி வழியில் பாக்ஸ் ஆபிஸ் கிங்காவே மாறியதும் குறிப்பிடத்தக்கது.
விஜய் ரசிகர்கள் வரவேற்பு
ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தை தொடர்ந்து #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல ஹாஷ்டேக் டிரெண்டானது. விஜய் ரசிகர்கள், சூப்பர்ஸ்டாரும் தளபதியும் இருக்கும் போட்டோக்களை போட்டு அந்த ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்தது மட்டுமின்றி, ரஜினியின் அரசியல் வருகைக்கு வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
தல ரசிகர்களும் சும்மா இல்லை
தமிழ் மக்கள் மீது ரஜினிகாந்துக்கு இருக்கும் அன்பு ஏகப்பட்ட இடங்களில் வெளிப்பட்டுள்ளது. தல அஜித் சார்பாக அரசியலுக்கு ரஜினிகாந்தை வரவேற்பதில் அஜித் ரசிகர் ரொம்பவே வரவேற்பதாகவும், 2021ல் ரஜினியின் அரசியல் மாற்றம் நிகழும் என்றும் ஏகப்பட்ட ட்வீட்களை போட்டு வருகின்றனர்.
சிவகார்த்திகேயன் ரசிகர்கள்
தல தளபதியை தொடர்ந்து ஏகப்பட்ட நடிகர்களின் ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் சூப்பர்ஸ்டாரின் அரசியல் பிரவேசத்துக்கு வாழ்த்துக்களை சொல்லி வருகின்றனர். சிவகார்த்திகேயன் ரசிகர்களும், சிவகார்த்திகேயன் சார்பில் ரஜினியின் அரசியல் என்ட்ரிக்கு சிகப்பு கம்பளம் விரித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











