தல, தளபதி ரசிகர்கள் ஏமாற்றம்.. கமல் 60ல் ரஜினி மட்டுமே!

Recommended Video

Kamal Hassan 60 years| Ungal Naan | Ilayaraja | A.R.Rahman

சென்னை: தமிழ் சினிமாவின் தலை சிறந்த கலைஞன், உலக நாயகன் கமல்ஹாசனின் 60 ஆண்டு சினிமா பயணத்தை கெளரவிக்க திரையுலகமே ஒன்று கூடி மாபெரும் விழாவாக 'உங்கள் நான்' என்ற விழாவை இன்று மாலை நடத்துகிறது.

சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பிக்க உள்ள இந்த நிகழ்ச்சிக்காக பிரம்மாண்ட அரங்கு அமைக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.

Thala, Thlapathy are not participate in Kamal 60 event

கமலின் நண்பரும் தமிழ்நாட்டின் சூப்பர்ஸ்டாருமான ரஜினிகாந்த் தலைமையில் 'உங்கள் நான்' நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த விழாவில், இசைஞானி இளையராஜா கமலுக்காக ஸ்பெஷல் இசைக்கச்சேரி நடத்துகிறார்.

ஏ.ஆர். ரஹ்மான், மணிரத்னம், வைரமுத்து உள்ளிட்ட தமிழ் சினிமா ஆளுமைகளும், முன்னணி நடிகர்கள் நடிகைகளும் இந்த விழாவில் பங்கேற்க உள்ளனர்.

ஆனால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களான விஜய் மற்றும் அஜித்குமார் இந்த விழாவில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

சினிமா நிகழ்ச்சிகள் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிகளிலும் வழக்கமாக நடிகர் அஜித் கலந்து கொள்வதில்லை.

ஆனால், நடிகர் விஜய் கலந்து கொள்வார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'தளபதி 64' படத்தின் ஷூட்டிங் டெல்லியில் நடைபெற்று வருவதால், நடிகர் விஜய்யும் இந்த விழாவில் கலந்து கொள்ள மாட்டார் என்றே தெரிகிறது.

சூர்யா, விக்ரம், விஜய்சேதுபதி, விஷால் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்பார்கள் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் இந்த மாபெரும் விழா நடத்தப்படுகிறது.

More from Filmibeat

Read more about: kamal கமல்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X