காலையிலேயே ஆரம்பித்த அஜித் ரசிகர்கள்.. இந்தியளவில் ட்ரென்ட்டாகும் தல 60 பூஜை நாள்! #THALA60PoojaDay

Recommended Video

Thala 60 movie kick starts with Pooja

சென்னை: நடிகர் அஜித்தின் தல 60 பூஜையை அவரது ரசிகர்கள் இந்தியளவில் ட்ரென்ட் செய்து வருகின்றனர்.

நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் அண்மையில் வெளியானது. இந்தப் படம் வசூலை குவித்ததோடு மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தை நடிகை ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூர் தயாரித்திருந்தார். ஹெச் வினோத் படத்தை இயக்கியிருந்தார்.
இந்நிலையில் அஜித் நடிக்கும் அடுத்த படமான தல 60வையும் அதே கூட்டணி உருவாக்குகிறது.

கறுப்பு முடி

கறுப்பு முடி

இந்த படத்திற்காக அஜித் தனது கெட்டப்பை மாற்றியுள்ளார். இதுவரை சால்ட் அன்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில் இருந்த அவர் தற்போது, கறுப்பு முடியுடன் க்ளீன் ஷேவ்டாக உள்ளார்.

தல60 பூஜைநாள்

தல60 பூஜைநாள்

அஜித்தின் தற்போதைய புகைப்படங்கள் அண்மையில் வெளியாகி சமூக வலைதளங்களை கலக்கியது. இந்நிலையில் தல60 படத்தின் பூஜை இன்று நடைபெறுவதாக தகவல் வெளியானது.

ஹேஷ்டேக் ட்ரென்ட்

ஹேஷ்டேக் ட்ரென்ட்

இதனை முன்னிட்டு அஜித் ரசிகர்கள், #THALA60PoojaDay என்ற ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்து வருகின்றனர். இந்த ஹேஷ்டேக் இந்தியளவில் ட்ரென்ட்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

மிரட்ட வருகிறது தல60

இந்த படத்தை விட ஒரு கேப்ஷன் தேவையா என கேட்டு மிரட்ட வருகிறது தல 60என்ற போஸ்டரை ஷேர் செய்திருக்கிறார் இவர்.

கொண்டாட்டம்

இறுதியாக தல ரசிகர்கள் அனைவருக்கும் கொண்டாட்டத்திற்கான நாள் வந்து விட்டது.. என்கிறார் இந்த ரசிகர்.

உற்சாகம் ஓவர்லோடட்

எல்லா கண்களும் தல 60 நடிகர்கள் மற்றும் படக்குழுவின் அப்டேட் மீதுதான் உள்ளது. ஏற்கனவே எதிர்பார்ப்புகள் வானளவில் உயர்ந்துள்ளது. போனி கபூர் சார் இதுக்கு மேல காத்திருக்க முடியாது.. உற்சாகம் ஓவர்லோடாகிவிட்டது.. தல 60 குறித்து ஒரு டிவிட் போடுங்க.. என கேட்டிருக்கிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X