தன்னம்பிக்கை நாயகன் ‘தல‘ பிறந்த நாள்..இணையத்தில் குவியும் வாழ்த்து !
சென்னை : தல அஜித்தின் பிறந்த நாளை ரசிகர்கள் இணையத்தில் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
Recommended Video
மே.1 என்றால் உழைப்பாளர் தினம்.ஆனால், இந்த தினம் கொண்டாட்டம் என்றால் அது தனி ஒரு நபருக்கு, தன்னம்பிக்கையின் நாயகனுக்கு, ரசிகர்களின் தலைவனுக்கு, தமிழ் சினிமாவின் அக்மார்க் ஜெண்டில் மேனுக்கு ஆம் இந்த வார்த்தைகள் யாவும் தல அஜித் குமார் என்ற சிறந்த மனிதனுக்குதான்.

இருபது வருடங்களுக்கு முன்னர் யாருக்கும் தெரியாது இந்த நட்சத்திரம் நிற்காமல் தமிழ் சினிமாவில் ஜொலிக்க போகிறது என்று. ரசிகர் மன்றங்களை கலைத்த பின்பும் ரசிகர் கூட்டம் ஏராளம், சமூக வலையதளங்கில் அவர் இல்லாவிட்டாலும் ட்ரெண்டிங் இந்த மாதிரியான அதிசயங்களுக்கு சொந்தம் நம் அஜித் அவர்கள்தான்.
இவர் தன் முதல் 2 படங்களை தெலுங்கு சினிமாவில் நடித்து தமிழ் சினிமாவில் கடுமையான உழைப்புடன் அமராதவதி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். சினிமாவையும் தாண்டி கார் ரேஸ்களில் அதிக கவனம் செலுத்தி வந்தார். சர்வதேச கார் ரேஸ்கள் ஓட்டும் சில இந்திய நபர்களில் இவரும் ஒருவர். அதுமட்டுமின்றி இவர் சென்னை எம்.ஐ.டி கல்லூரியில் டெஸ்ட் பைலடாகவும் அப்பாய்ண்ட் செய்யப்பட்டார்.

நெஸ்கப்பே கம்பெனியின் பிராண்ட் அம்பாசெட்டராக இருந்த இவர் பின் எந்த விளம்பர படங்களிலும் நடிக்க தவிர்த்தார்.பட்டித்தொட்டி எங்கும் ரசிகர் பட்டாளம் வைத்திருக்கும் இவரின் படம் ரிலீஸ் என்றாலே மாஸ் ஓபனிங்,பாக்ஸ் ஆபிஸ் ஹிட் என பட்டயை கிளப்பும்.
ரஜினி நடித்த பில்லா படத்தை ரீமேக் செய்தாலும் தனக்கென தனி ஸ்டைல் கிளாஸான கோட் சூட் என ஒரு மாஸான டானாக வந்தார்.இன்றும் அந்த திரைப்படம் பலரால் பேசப்படுகிறது.ஹீரோ என்றால் ஸ்டைலான ஹேர் லுக்குடன்தான் இருக்க வேண்டும் என்பதை உடைத்து சால்ட் அன்ட் பெப்பர் முறையில் புது ட்ரெண்டை கொண்டு வந்தார்.

இது போல் பல வித்தியாசமான அம்சங்களை கொண்ட தல அஜித்தின் பிறந்த நாள் இன்று. அவரின் பிறந்த நாள் சமூக வலையதளங்களின் மூலம் பலரால் கொண்டப்பட்டு வருகிறது. பல பிரபலங்களின் வாழ்த்துக்கள் இவருக்கு வந்த வண்ணம் உள்ளன.


Click it and Unblock the Notifications











