தலைநகரம் 2 படத்தின் பர்ஸ்ட் லுக்... யாரெல்லாம் வெளியிடறாங்க பாருங்க
சென்னை : நடிகரும் இயக்குநருமான சுந்தர் சியின் நடிப்பில் உருவாகி வரும் படம் தலைநகரம்.
இந்தப் படத்தின் முதல் பாகம் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இரண்டாவது பாகம் உருவாகி வருகிறது.
இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளைய தினம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகரம் படம்
நடிகர் சுந்தர் சி நடிப்பில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படம் தலைநகரம். இந்தப் படம் சுந்தர் சி முதல் முறையாக ஹீரோவாக நடித்த படம். வடிவேலுவின் முக்கியமான படங்களில் இந்தப் படமும் ஒன்றாக அமைந்தது. இந்தப் படத்தில் நாய் சேகர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் வடிவேலு.

சுராஜ் இயக்கம்
மேலும் படத்தில் ஜோதிர்மயி, போஸ் வெங்கட், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டவர்களும் லீட் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சுராஜ் இயக்கத்தில் படம் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்தின் கேரக்டரின் தலைப்பில் தனது ரீ என்ட்ரியை வடிவேலு துவக்கியுள்ளார்.

தலைநகரம் 2 படம்
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற தலைப்பில் அவர் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சம்மர் ரிலீசாக படம் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தலைநகரம் படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது.

இருட்டு படத்தின் கூட்டணி
இருட்டு படத்தின்மூலம் இணைந்த சுந்தர் சி மற்றும் வி இசட் துரை கூட்டணி தற்போது தலைநகரம் 2 படத்தில் இணைந்துள்ளது. இந்தப் படத்தில் மீண்டும் வடிவேலுவை நடிக்க வைக்கவும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இந்நிலையில் தலைநகரம் படத்தின் சூட்டிங் ஜரூராக நடைபெற்று வருகிறது.

பர்ஸ்ட் லுக் போஸ்டர்
இதனிடையே படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் நாளைய தினம் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த போஸ்டரை நடிகர் ஆர்யா, மற்றும் ஜீவா, நடிகை குஷ்பூ ஆகியோர் நாளை காலை 10 மணிக்கு வெளியிட உள்ளனர்.

அதிகரித்துள்ள எதிர்பார்ப்பு
படத்தை இயக்குநர் வி இசட் துரை மற்றும் எஸ்எம் பிரபாகரன் இணைந்து தயாரிக்கவுள்ளனர். வி இசட் துரை மற்றும் சுந்தர் சி இணைந்து வெளியான முந்தைய படமான இருட்டு, த்ரில்லர் ஜானரில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்திற்கு அதிகமான எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











