For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தலைவா படத்தில் துளி கூட அரசியல் இல்லை! - விஜய்

    By Shankar
    |

    சென்னை: நான் நடித்துள்ள தலைவா படம் அரசியல் படமே அல்ல, என்று நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    தலைவா படம் பல்வேறு சிக்கல்களில் சிக்கியுள்ளது. படம் வருமா வராதா என்ற சூழலில் ஒரு தன்னிலை விளக்கமாக விஜய் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

    "தலைவா' படம் குடும்பத்தோடும், குழந்தைகளோடும் எல்லோரும் ரசிக்க கூடிய ஜனரஞ்சகமான படம். இந்த படத்தில் 'காதல்' ஆக்ஷன், காமெடி போன்ற அனைத்து அம்சங்களும் உள்ளன. இது அரசியல் சம்பந்தப்பட்ட படம் அல்ல.

    யாரோ சிலர் இது அரசியல் படம் என்று வதந்திகள் பரப்பி வருகிறார்கள். யாரும் இதை நம்ப வேண்டாம். துளி கூட அரசியல் இல்லாத ஒரு சமூக படம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்," என்று விஜய் கூறியுள்ளார்.

    இயக்குநர் விஜய், தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் ஆகியோரும் தலைவா அரசியல் படம் அல்ல என்று அறிவித்துள்ளனர்.

    English summary
    Actor Vijay says that Thalaivaa movie is not a political movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X