எகிறிய 'தலைவா' பட்ஜெட்: டென்ஷனில் தயாரிப்பாளர்கள்
சென்னை: தலைவா படத்தின் பட்ஜெட் நிர்ணயிக்கப்பட்டதை விட எகிறிவிட்டதாம். இதனால் தயாரிப்பு நிறுவனம் அதிர்ச்சி அடைந்துள்ளது என்று கூறப்படுகிறது.
விஜய், அமலா பாலை வைத்து இயக்குனர் ஏ.எல். விஜய் எடுத்துள்ள படம் தலைவா. இந்த படத்தின் ஷூட்டிங் மும்பையில் துவங்கி ஆஸ்திரேலியாவில் முடிந்தது.
ஆஸ்திரேலியாவில் பல நாட்கள் ஷூட்டிங் நடந்தது. அமலா மற்றும் ராகினியுடன் விஜய் ஆடும் பாடல்கள் அங்கு தான் படமாக்கப்பட்டன. மும்பையைவிட ஆஸ்திரேலியாவில் தான் அதிக நாட்கள் ஷூட்டிங் நடந்துள்ளது.

வெளிநாட்டு மாடல் அழகிகள்
ஆஸ்திரேலியாவில் பாடல் காட்சிகளை படமாக்கியபோது வெளிநாட்டு மாடல் அழகிகளை நடனமாட வைத்துள்ளனர். அவர்களுக்கு நாள் ஒன்று 100 டாலர் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. சுமார் 300 நடன கலைஞர்கள் பாடல்களுக்கு ஆடியுள்ளார்களாம்.

பட்ஜெட் எகிறிடுச்சே
ஆஸ்திரேலியாவில் அதிக நாட்கள், அங்குள்ள அழகிகளை வைத்து நடனம் என்று படம் எடுத்ததில் பட்ஜெட் எகிறிவிட்டதாம். இதனால் தயாரிப்பு நிறுவனம் அதிர்ச்சி அடைந்துவிட்டது என்று கூறப்படுகிறது.

படம் ஓடி பணம் வரும்பா
படம் நிச்சயம் ஹிட்டாகிவிடும். அப்புறம் என்ன போட்ட பணத்தை லாபத்துடன் அள்ளிவிடலாம் என்று கூறி தயாரிப்பாளர்களை சுற்றியிருப்பவர்கள் சற்று சாந்தப்படுத்தியுள்ளார்களாம்.


Click it and Unblock the Notifications











