Don't Miss!
- News மாமியாரை ஒரே எத்து.. அலேக்கா "தூக்கி" குப்பை தொட்டியில் போட்டாச்சு.. அந்த மகராசியின் பெயர் "லட்சுமி"
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
தலைவா.... தமிழகத்தில் நல்ல ஓபனிங்!
சென்னை: விஜய் நடித்த தலைவா படம் இன்று முதல் தமிழகத்தில் வெளியாகிறது.
முதல் காட்சி இன்று காலை சென்னை மாயாஜால், சத்யம் எஸ்கேப் உள்ளிட்ட அரங்குகளில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் தொடங்கியது.
முதல் காட்சி என்பதால் விஜய் ரசிகர்கள் திரண்டு வந்திருந்தனர் படம் பார்க்க. தியேட்டர்கள் முன்பு பேனர்கள், அலங்கார வளைவுகளை விஜய் ரசிகர் மன்றங்கள் சார்பில் அமைத்திருந்தனர்.
முன்பதிவுக்கு கூட்டமில்லை
ஞாயிற்றுக்கிழமையே டிக்கெட் முன்பதிவு தொடங்கினாலும், முன்பதிவு எதிர்ப்பார்த்த அளவுக்கு நடக்கவில்லை.
திருட்டு டிவிடியால் பாதிப்பு
காரணம் இந்தப் படத்தை நிறையப் பேர் திருட்டு டிவிடியில் பார்த்துவிட்டது. இன்னொன்று படம் எப்படி இருக்கிறது என்ற தகவல்கள் விமர்சனங்கள் மூலம் ஏற்கெனவே தெரிந்துவிட்டதுதான்.
முதல் நாளில் ஹவுஸ்புல்
ஆனால் இன்று முதல் நாள் காட்சிக்கு அனைத்து அரங்குகளும் கிட்டத்தட்ட ஹவுஸ் புல். சத்யம் சினிமாஸின் அனைத்து அரங்குகளிலும் தலைவா முதல் காட்சி ஹவுஸ் புல்லாகிவிட்டது. ஆனால் அடுத்தடுத்த காட்சிகளுக்கு முன்வரிசை டிக்கெட்டுகள் கிடைக்கின்றன.
மாயாஜாலில் 44 ஷோ
மாயாஜாலில் இந்தப் படத்தை டால்பி அட்மோஸில் 5 காட்சிகளும், சாதாரணமாக 44 காட்சிகளும் திரையிட்டுள்ளனர்.
டால்பியில் ஹவுஸ்புல்
முதல் நாளான இன்று டால்பி அட்மோஸ் காட்சிகள் அனைத்தும் ஹவுஸ் புல்லாகிவிட்டன. ஆனால் வழக்கமான காட்சிகளுக்கு ஓரளவு டிக்கெட்டுகள் கிடைக்கின்றன.
எப்படியும் கூட்டம் வரும்
பொதுவாக வெள்ளிக்கிழமைதான் படங்கள் வெளியாகும். அதற்கு அடுத்தடுத்த இரு தினங்கள் விடுமுறை என்பதால் படங்கள் எப்படி இருந்தாலும் கூட்டம் வந்துவிடும்.
பரவாயில்லையே...
ஆனால் தலைவா படமோ வார நாளான செவ்வாய்க்கிழமை வெளியாகியுள்ளது. இருந்தாலும் பெருமளவு அரங்குகளில் இன்று கிட்டத்தட்ட ஹவுஸ்புல் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் 38 தியேட்டர்
சென்னையில் மட்டும் 38 அரங்குகளில் இந்தப் படம் வெளியாகியுள்ளது. மாயாஜாலில் 49 காட்சிகளும், சத்யம் வளாகங்களில் 24 காட்சிகளும் திரையிடப்பட்டுள்ளது இந்தப் படம்.
புறநகர்களில் நல்ல ஓப்பனிங்
புறநகர்கள், வெளியூர்களிலும் தலைவாவுக்கு இன்று நல்ல ஓபனிங் கிடைத்துள்ளது.
தியேட்டர்காரர்களுக்கு சந்தோஷம்தான்
எப்படியும் வெள்ளி, சனி, ஞாயிறு அரங்குகள் நிறைந்துவிடும் என்பதால் மகிழ்ச்சியோடு உள்ளனர் திரையரங்க உரிமையாளர்கள். காரணம், அவர்கள் போட்ட பணத்தை எடுக்க இந்த 5 நாட்கள் போதும் என்கிறது கோடம்பாக்க வட்டாரம்!