கல்லூரி மாணவர்களுக்காக 'தலைவா' சிறப்பு காட்சி
கோவை: கல்லூரி மாணவர்களுக்காக விஜய்யின் தலைவா படத்தின் சிறப்பு காட்சி கோவையில் வரும் 10ம் தேதி திரையிடப்படுகிறது.
விஜய்யின் தலைவா படம் வரும் 9ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் முதன்முதலாக சொந்த குரலில் பேசி நடித்துள்ளார் அமலா பால்.
தலைவா மட்டும் ஹிட்டானால் ஹன்சிகாவுக்கு நான் தான் போட்டி என்று அமலா பால் தெரிவித்துள்ளார்.

கல்லூரி ரசிகர்கள்
விஜய்க்கு பள்ளி, கல்லூரி மாணவர்கள், பல்வேறு அலுவலகங்களில் பணிபுரிபவர்கள், பாமரர்கள் உள்பட ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதில் கல்லூரி மாணவர்களுக்காக தலைவா சிறப்பு காட்சி திரையிடப்படுகிறது.

கோவையில்
வரும் 10ம் தேதி கோவையில் உள்ள சென்ட்ரல் சினிமாஸில் 12.45 மணி காட்சி கல்லூரி மாணவ, மாணவியருக்கான சிறப்பு காட்சியாக திரையிடப்படுகிறது.

டிக்கெட் எடுக்கணும்பா
கல்லூரி மாணவர்கள் தங்கள் ஐடி கார்டுகளை காட்டிவிட்டு டிக்கெட்டு எடுத்த பிறகு சிறப்பு காட்சியை காணலாம். டிக்கெட் இலவசம் எல்லாம் இல்லை.

செம கிராக்கி
சென்ட்ரல் சினிமாஸில் தலைவா வரும் 9ம் தேதி திரையிடப்படுகிறது. இதற்கான முன்பதிவு ரிலீஸுக்கு ஒரு வாரத்திற்கு முன்பே துவங்கிவிட்டது. கடந்த வெள்ளிக்கிழமையே 60 சதவீத டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











