எப்பத்தான் வருவீங்க தலைவா...? ஏக்கத்தில் விஜய் ரசிகர்கள்

By Sudha

சென்னை: தலைவா படம் எப்போது வரும் என்ற ஏக்கப் பெருமூச்சுடன் காத்திருக்கின்றனர் நடிகர் விஜய்யின் ரசிகர்கள்.

இந்த செய்தியை எழுதும் நிமிடம் வரை தலைவா ரிலீஸ் குறித்த எந்த உருப்படியான தகவலும் வரவில்லை.

தற்போதைய நிலவரப்படி தலைவா படம் இப்போதைக்கு தமிழகத்தில் ரிலீஸ் ஆவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.

உலகம் பூராவும் ரிலீஸ்

உலகம் பூராவும் ரிலீஸ்

தலைவா படம் ஏற்கனவே பல்வேறு நாடுகளில் ரிலீஸாகி விட்டது. அங்கெல்லாம் ரசிகர்கள் படத்தைப் பார்த்து பலவிதமான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

அக்கம்பக்கத்திலும் கூட ரிலீஸ்

அக்கம்பக்கத்திலும் கூட ரிலீஸ்

அதேபோல அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திராவிலும், மும்பை போன்ற நகரங்களிலும் கூட படம் வெளியாகி விட்டது.

படையெடுக்கும் ரசிகர்கள்

படையெடுக்கும் ரசிகர்கள்

தமிழகத்தில் படம் வெளியாகவில்லை என்பதால் கேரள, கர்நாடக, ஆந்திர எல்லைப் புறங்களில் வசிக்கும் ரசிகர்கள் அந்தந்த மாநிலங்களுக்குப் போய் படம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

எல்லாக் கதவும் அடைப்பு

எல்லாக் கதவும் அடைப்பு

தமிழகத்தில் படத்தைத் திரையிட எந்த வழியும் தென்படவில்லை. அத்தனைக் கதவுகளும் அடைபட்டிருப்பதாகவே தோன்றுகிறது.

விடிய விடிய பேச்சு

விடிய விடிய பேச்சு

இந்த நிலையில் படத்தைத் திரையிடுவது தொடர்பாக நேற்று இரவு விடிய விடிய தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் இடையே தீவிரப் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் அரசுத் தரப்பு இன்னும் பச்சைக் கொடி காட்டவில்லை என்பதை சுட்டிக் காட்டிய தியேட்டர் உரிமையாளர்கள் படத்தைத் திரையிடுவதை இப்போதைக்கு நிறுத்தி வைப்பதாக கூறி விட்டனர்.

எப்போது விமோச்சனம்

எப்போது விமோச்சனம்

இதனால் தலைவா படம் வெளியாவதற்கான சாத்தியக் கூறுகள் இன்னும் தோன்றவில்லை. இதனால் ரசிகர்கள் மேலும் சில நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X