மீண்டும் தூசி தட்டப்பட்ட ‘தலைவன் இருக்கிறான்’.. 19 வருடங்களுக்குப் பின் கமல் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான்!

கமலின் தலைவன் இருக்கிறான் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

சென்னை: கமலின் தலைவன் இருக்கிறான் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவராக தீவிர அரசியலில் இறங்கியுள்ளார் நடிகர் கமல். இதனால் இந்தியன் 2 படத்திற்குப் பிறகு இனி சினிமாவில் நடிக்கப் போவதில்லை என ஏற்கனவே அவர் அறிவித்திருந்தார். ஆனால் அப்பட வேலைகளும் பாதியிலேயே நின்று விட்டது.

தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார் கமல். அதனையும் தனது அரசியல் களத்திற்கான ஒரு கருவியாகவே அவர் பயன்படுத்தி வருகிறார்.

இந்தச் சூழ்நிலையில், நேற்றிரவு கமலும், இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானும் தங்களது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படமும், பதிவும் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. அந்தப் பதிவில் அவர்கள், தலைவன் இருக்கிறான் பட வேலைகள் பற்றி பதிவிட்டிருப்பது தான் ரசிகர்களின் மகிழ்ச்சிக்கு காரணம்.

தலைவன் இருக்கிறான்:

தலைவன் இருக்கிறான்:

'விஸ்வரூபம் 2', 'சபாஷ் நாயுடு' படங்களைத் தொடர்ந்து 'தலைவன் இருக்கிறான்' என்ற தலைப்பில் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கமல் அறிவித்தார். ஆனால், விஸ்வரூபம் 2 படத்திற்கு பிறகு திட்டமிட்டபடி சபாஷ் நாயுடு படத்தை எடுக்க முடியவில்லை. பல்வேறு பிரச்சனைகளால் அந்த படத்தின் படப்பிடிப்பு பாதியிலே நின்றது.

பிக் பாஸ் 3:

பிக் பாஸ் 3:

அதனைத் தொடர்ந்து கட்சி வேலைகள், பிக் பாஸ் நிகழ்ச்சி, இந்தியன் 2 என பிஸியானார் கமல். நடைபெற்ற லோக்சபா தேர்தலிலும் யாருடனும் கூட்டணி வைக்காமல் கமலின் மக்கள் நீதி மய்யம் தனியாக நின்று மக்களின் கவனத்தை பெற்றது. தற்போது பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கி வருகிறார்.

ஏ.ஆர்.ரஹ்மான்:

இந்தச் சூழ்நிலையில் தான் தலைவன் இருக்கிறான் படம் பற்றிய புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. கமலுடன் எடுத்த புகைப்படம் ஒன்றை ஏ.ஆர்.ரகுமான் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘கமலுடன் பணியாற்றுவது மகிழ்ச்சியாகவும், ஆர்வமாகவும் இருப்பதாக' தெரிவித்துள்ளார்.

கமல் டிவீட்:

இதே போன்ற டிவீட்டை கமலும் வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘உங்கள் பங்களிப்புடன் எனது அணியை வலுப்படுத்தியதற்கு நன்றி. சில திட்டங்களை உருவாக்கும் போது நன்றாகவும், சரியானதாகவும் உணர முடியும். தலைவன் இருக்கிறான் அத்தகைய ஒன்றாகும். இதற்காக உங்கள் உற்சாகத்தின் நிலை மிகவும் அளப்பரியதாகும். அதை என் மற்ற குழுவினருக்கும் பரப்புகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

அரசியல் படம்:

அரசியல் படம்:

தலைவன் இருக்கிறான் படம் தமிழ், இந்தி ஆகிய இரண்டு மொழிகளில் இப்படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. பொருளாதாரம், நிழல் உலகம் மற்றும் அரசியல் கோட்பாடுகளை மையப்படுத்தியது என இப்படத்தைப் பற்றி முன்பே கமல் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியன் 2வைப் போல் இல்லாமல், இப்படத்தையாவது கமல் முழுவதும் முடித்து ரிலீஸ் செய்வாரா என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X