Thalaivan Thalaivi Review: தலைவன் தலைவி படம் எப்படி இருக்கு.. ட்விட்டர் விமர்சனம் இதோ!

சென்னை: குடும்பங்கள் கொண்டாடும் படத்தை இயக்கி பெயர் எடுத்த இயக்குநர் பாண்டிராஜ், மூன்று வருடத்திற்கு பிறகு இயக்கி இருக்கும் திரைப்படம் தான் தலைவன் தலைவி. இந்த படத்தில் விஜய்சேதுபதி,நித்யா மேனன், யோகி பாபு, தீபா சங்கர், ரோஷினி ஹரிப்ரியன், மைனா நந்தினி, காளி வெங்கட்,செண்ட்ராயன் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கும் இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

Thalaivan Thalaivi Vijay Sethupathi Nithya Menon
Photo Credit:

இப்படத்தில் விஜய் சேதுபதி பரோட்டா மாஸ்டராக ஆகாசவீரன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் மற்றும் பாடல் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது. இந்த படத்தில் இருந்து வெளியான "பொட்டல முட்டாயே" பாடல் வெளியானது. அந்த பாடலை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் இப்படம் இன்று தியேட்டரில் வெளியாகி உள்ளது. இப்படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை இப்போது பார்க்க

கரடுமுரடான காதல்: தலைவன் தலைவி படம் இன்று வெளியாகி இருக்கும் நிலையில், படம் பார்த்த ரசிகர் ஒருவர், இந்த படத்தை இந்த காரணத்திற்காக பார்க்கலாம் என காரணத்தை சொல்லி உள்ளார். படத்தில் காதல் கரடுமுரடு தனமாக உள்ளது. அதே போல,
விஜய்சேதுபதி, நித்யாமேனன் நடப்பு அட்டகாசம். இயக்குநர் பாண்டிராஜ் வழக்கம் போல, குடும்பக் கதைகளை முழுமையான பொழுதுபோக்கு படமாக கொடுத்து இருக்கிறார் என படத்தை வெகுவாக பாராட்டி இருக்கிறார்.

முதல் பாதி விறுவிறுப்பு: படம் பார்த்த மற்றொரு இணையவாசி, தலைவன் தலைவி முதல் பாதி விறுவிறுப்பாக சொல்கிறது. இயக்குனர் பாண்டிராஜ் மீண்டும் ஒருமுறை தனது தனித்துவமான குடும்ப படத்தை எடுத்துள்ளார். ஆனால், இந்த முறை படத்தில் அதிக காதல் பாடல்கள், நகைச்சுவை என படம் கலவையாக உள்ளது. கதைக்கு சுவாரசியத்தை கொடுக்கும் வகையில், விஜய்சேதுபதி மற்றும் நித்யாமேனன் தங்கள் நடிப்பால் படத்திற்கு மெருகூட்டி உள்ளனர். அதே போல இன்டர்வல் பிளாகும் சூப்பர் என பதிவிட்டுள்ளார்.

விஜய்சேதுபதி சூப்பர்: தலைவன் தலைவி படம் பார்த்த மற்றொரு ரசிகர், இடைவேளை வரை படம் தாறுமாறாக உள்ளது. நகைச்சுவை மற்றும் கவர்ச்சிகரமான இசையால் படம் கலகலப்பாக நகர்கிறது. விஜய் சேதுபதி ஒரு அன்பான பாத்திரத்தில் ஜொலிக்கிறார். நித்யா மேனன் படத்தின் கதைக்கு அரவணைப்பாக இருக்கிறார். நகைச்சுவை சூப்பர், குறிப்பாக துணை நடிகர் சிறப்பாக நடித்துள்ளனர். இரண்டாம் பாதி தலைவன் தலைவிக்காக காத்து இருக்கிறோம் என பதிவிட்டுள்ளார்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X