VJS: சத்தியத்தை மீறிய விஜய் சேதுபதி.. பைக்கில் இருந்து குதித்த மனைவி.. இப்படியா சமாதானம் செய்தாரு!
சென்னை: நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 25ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் தலைவன் தலைவி. பாண்டிராஜ் இயக்கிய இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்கிறார். படத்தில் இவர்களுடன் சென்ட்ராயன், காளி வெங்கட், மைனா நந்தினி, ஆர்.கே. சுரேஷ், சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முதல் நாளைக் காட்டிலும் இரண்டாவது நாளில் படத்தின் வசூல் அதிகரித்துள்ளதால் படக்குழு மகிழ்ச்சியாக உள்ளது.
படத்தின் கதையே குடும்ப கதை என்பதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக, கிராமப்புற ரசிகர்கள் மத்தியிலும் படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தின் வசூல் இன்றும் அதிகரிக்கும் என்பதால் படம் வணிக ரீதியான வெற்றிப் படமாக மாறும் என கூறப்படுகிறது. படத்தில் கணவன் மனைவி சண்டை, அதையொட்டிய குடும்பப் பிரச்னை என அனைத்து தரப்பு ரசிகர்களையும் கனெக்ட் செய்யவைக்கும் கதையும் திரைக்கதையும் படத்தை வெற்றிப் படமாக மாற்றியுள்ளது. இது மட்டும் இல்லாமல், படத்தை சோகமாக சீரியல் போல கொண்டு செல்லாமல், அங்கங்கு சென்டிமென்ட், படம் முழுக்க காமெடி என படம் வெற்றிப் படமாக தலைவன் தலைவி அமைந்துள்ளது.

இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய, விஜய் சேதுபதி தனது மனைவியிடம் செய்த பொய் சத்தியம் மற்றும் அவருடன் செய்த சண்டைகள் குறித்தும் பகிர்ந்து கொண்டுள்ளார். அதாவது திருமணத்திற்குப் பின்னரும், நான் சினிமாவுக்கு முயற்சி செய்து கொண்டு இருந்தேன். அப்படி முயற்சி செய்த போது, நிறைய புகைப்படங்களை எடுத்து அதில் நடிகர் விஜய் சேதுபதி என எழுதி வைத்திருந்தேன்.
பொய் சத்தியம்: இதைப் பார்த்த எனது மனைவி அதை எடுத்துக் கொண்டு அவரது அப்பா வீட்டுக்குப் போய்விட்டார். அதன் பின்னர் அவரைச் சமாதானம் செய்ய, சினிமாவில் நடிக்க முயற்சி எடுக்கவே மாட்டேன் என சத்தியம் செய்து, அந்த புகைப்படங்களை கிழித்து போட்டுவிட்டு, வீட்டுக்கு சமாதானம் செய்து அழைத்து வந்தேன். அதன் பின்னர் வேறு புகைப்படங்கள் எடுத்து மீண்டும் நடிக்க முயற்சி செய்தேன்.

பைக் சண்டை: அதேபோல் ஒரு முறை, சிக்னலில் நாங்கள் பைக்கில் நின்று கொண்டு இருந்தோம். எங்கள் இருவருக்கும் இடையில் கொஞ்சம் சண்டை. சிக்னலில் எனது மனைவி பைக்கில் இருந்து கீழே இறங்கிவிட்டார். அதன் பின்னர், அவரை சமாதானம் செய்து அழைத்து வந்தேன்" என பகிர்ந்து கொண்டுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











