தலைவர் 167: எல்லாமே பொய்யாம் கோப்ப்பால்
சென்னை: தலைவர் 167 குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் படத்தில் அவருக்கு மகளாக நிவேதா தாமஸ் நடிக்கக்கூடும் என்று செய்திகள் வெளியானது.

ரஜினிக்கு ஜோடியாக நடிக்க நயன்தாரா சம்மதம் தெரிவித்துவிட்டார் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் ரஜினியின் பி.ஆர்.ஓ. அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஊடக நண்பர்களே, தலைவர் 167 படத்தில் நடிக்கும் கலைஞர்கள் பற்றி பரவியுள்ள வதந்திகளில் உண்மை இல்லை. தற்போதைக்கு நயன்தாரா மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளார். தலைவர் 167 படத்தில் யார், யார் நடிக்கிறார்கள் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை எந்த செய்தியையும் பரப்ப வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அப்படி என்றால் நயன்தாரா நிவேதா தாமஸ் அம்மா இல்லை. முன்னதாக தலைவர் 167 பட போட்டோஷூட்டில் எடுத்த புகைப்படங்கள் கசிந்தன. அதில் ரஜினி இளமையாக உள்ளார்.
இந்த படம் ரஜினி ரசிகர்களுக்கு மட்டும் அல்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும் என்று ஏற்கனவே முருகதாஸ் வாக்குறுதி அளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











