'தல' படத்துக்குப் பிறகு 'தலைவர்' படம்... 'அன்பு' பாலா அளவில்லா மகிழ்ச்சி
சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில், முக்கிய கேரக்டரில் நடிப்பதாக நடிகர் பாலா தெரிவித்தார்.
தமிழில், அன்பு படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் பாலா. காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம், கலிங்கா உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்துள்ளார். பின்னர் மலையாள சினிமாவுக்குச் சென்ற அங்கு, முன்னணி நடிகராக இருக்கிறார்.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'வீரம்' படம் மூலம் தமிழுக்கு வந்தார். அந்தப் படத்தில் அஜித்குமார் தம்பிகளுள் ஒருவராக நடித்தார். இந்தப் படத்தை இயக்கிய 'சிறுத்தை' சிவா, இவரது அண்ணன்.
இப்போது ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்குகிறார் சிவா. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜ், மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ் உட்பட பலர் நடிக்கின்றனர். டி.இமான் இசை அமைக்கிறார்.
இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் பாலாவும் நடிப்பதாக தகவல் வெளியானது. இதுபற்றி அவரிடம் கேட்டபோது, உண்மைதான் என்றார்.
பாலாவும் கேரளாவைச் சேர்ந்த பிரபல பின்னணி பாடகி அம்ருதாவுக்கும் சமீபத்தில் விவாகரத்து வழங்கி, கேரள மாநிலம் எர்ணாகுளம் குடும்ப நல நீதிமன்றம் கடந்த சில நாட்களுக்கு முன் தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











