25 வருசத்துக்கு பிறகு ‘அந்த’ மாதிரி நடிக்கும் ரஜினி.. அப்போ ரோஜா இப்போ குஷ்பு.. ஆனா மீனா மீனாதான்!

தலைவர் 168 படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் பற்றி தெரிய வந்துள்ளது.

சென்னை: தலைவர் 168 படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் பற்றிய முக்கியத் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

தர்பார் படத்தைத் தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தினை தலைவர் 168 எனக் குறிப்பிட்டு வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. குஷ்பு, மீனா மற்றும் கீர்த்தி சுரேஷ் என இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மூன்று நடிகைகள் உள்ளனர்.

விஸ்வாசம் படத்தைப் போலவே இப்படமும் கிராமத்து பின்னணியில் குடும்ப செண்டிமெண்ட், ஆக்‌ஷன், காதல் என அனைத்தும் கலந்த கலவையாக இருக்கும் என சமீபத்திய பேட்டியில் இயக்குநர் சிவா தெரிவித்திருந்தார்.

இரண்டு மனைவிகள்

இரண்டு மனைவிகள்

இந்நிலையில் தலைவர் 168 படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் பற்றிய முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. அதாவது இப்படத்தில் ரஜினிக்கு இரண்டு மனைவிகள் என்றும், அதில் ஒருவர் குஷ்பு, மற்றொருவர் மீனா என்றும் கூறப்படுகிறது.

25 வருடங்களுக்குப் பிறகு

25 வருடங்களுக்குப் பிறகு

இந்தத் தகவல் எந்தளவிற்கு உண்மை எனத் தெரியவில்லை. ஆனால் இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், கிட்டத்தட்ட 25 வருடங்களுக்குப் பிறகு இரண்டு மனைவிகளுக்கு கணவராக ரஜினி இப்படத்தில் நடிக்கிறார்.

வீரா படம்

வீரா படம்

இதற்கு முன்னர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 1994ம் ஆண்டு வெளியான வீரா படத்தில் ரஜினி இதே போன்று இரண்டு பெண்களுக்கு கணவராக நடித்திருந்தார். அப்போது அவரது ஒரு மனைவியாக மீனாவும், மற்றொரு மனைவியாக ரோஜாவும் நடித்திருந்தனர்.

அதே மாதிரியா?

அதே மாதிரியா?

மாபெரும் வெற்றி பெற்ற அப்படத்தில், இரண்டு மனைவிகளுக்கு இடையே சிக்கிக் கொண்டு ரஜினி படும் அல்லல்தான் கதைக்களம். அதேபோல் இப்படத்தில் இரண்டு மனைவிகளுடன் அவர் படும் பாடு கதைக்களமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X