தலைவர் 168 இயக்குநருடன் புத்தாண்டை கொண்டாடிய புது மாப்பிள்ளை சதீஷ்!

சென்னை: விஸ்வாசம் படத்திம் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் சிறுத்தை சிவா ரஜினிகாந்தின் 168வது படத்தை இயக்கி வருகிறார்.

2020 புத்தாண்டை முன்னிட்டு, இயக்குநர் சிவா, காமெடி நடிகர்கள் சதீஷ் மற்றும் சூரி இணைந்திருக்கும் பக்தி மயமான புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

புதுசா கல்யாணம் ஆன புது மாப்பிள்ளை சதீஷ், தனது மனைவியுடன் புத்தாண்டை கொண்டாடாமல் தலைவர் 168 படக்குழுவினருடன் புத்தாண்டை கொண்டியுள்ளார்.

புதுமாப்பிள்ளை

புதுமாப்பிள்ளை

2019ம் ஆண்டு பல திரைப் பிரபலங்களின் திருமணம் நடைபெற்றது. 2019ம் ஆண்டு இறுதியில் மிகவும் பிரம்மாண்டமாக காமெடி நடிகர் சதீஷ் திருமணம் நடைபெற்றது. புதுமாப்பிள்ளைக்கு சர்ப்ரைஸ் கிஃப்டாக தலைவர் 168 படத்தில் அவர் நடிக்கிறார் என்ற அறிவிப்பு திருமண நாள் அன்று அறிவிக்கப்பட்டது.

ஆயுத பூஜைக்கே

ஆயுத பூஜைக்கே

2020 தீபாவளிக்குத் தான் தலைவர் 168 திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரஜினிகாந்தின் ஸ்பீட் மற்றும் இயக்குநர் சிவாவின் பக்காவான இயக்கத்தால் ஆயுத பூஜைக்கே தலைவர் 168 திரைப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விடுமுறையின்றி

விடுமுறையின்றி

கிறிஸ்துமஸ் மற்றும் நியூ இயர் கொண்டாட்டங்களை முன்னிட்டு படங்களின் ஷூட்டிங்கிற்கு தற்காலிகமாக விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆனால், தலைவர் 168 படக்குழுவினர் நியூ இயர் விடுமுறையின்றி படு வேகமாக உழைத்து வருகின்றனர்.

நியூ இயர் கொண்டாட்டம்

இந்நிலையில், புத்தாண்டை முன்னிட்டு அருகில் உள்ள கோவிலில் சாமி கும்பிட்டு நெற்றி நிறைய பட்டையுடன் இயக்குநர் சிவா, சூரி, சதீஷ் மற்றும் கேமராமேன் வெற்றி உள்ளிட்டோர் இணைந்து கொண்டாடிய பக்தி மயமான நியூ இயர் கொண்டாட்ட புகைப்படத்தை புது மாப்பிள்ளை சதீஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தலைவருக்கு வாழ்த்து

தலைவர் 168 படக்குழுவினரின் புத்தாண்டு கொண்டாட்டத்தை பார்த்த ரசிகர்கள், தலைவர் ரஜினிக்கு வாழ்த்து சொன்னதாக சொல்லிடுங்க என கமெண்ட் செய்து வருகின்றனர்.

எவ்ளோ தெய்வீகமா இருக்காங்க

நியூ இயர் என்றாலே மதுபாட்டிலுடன் புத்தாண்டை பலர் கொண்டாடி வரும் நிலையில், எவ்ளோ தெய்வீகமா இருக்காங்க என இந்த ரசிகர் கமெண்ட் செய்துள்ளார்.

சூரி ஷூ போட்டுருக்காரு

கோயிலுக்கு வெளியே நிற்கின்ற புகைப்படத்தில் மற்ற யாரும் ஷூ போடவில்லை. நடிகர் சூரி ஷூ போட்டுள்ளதை நோட் பண்ணி இந்த நெட்டிசன் அவருக்கு வேட்டு வைக்க பார்க்கிறார்.

தலைவர் 168 லுக் எங்கே?

மாஸ்டர், சூரரைப் போற்று போன்ற படங்களின் போஸ்டர்கள் வெளியாகி வருகின்ற நிலையில், தலைவர் 168 லுக் எங்கே? என இந்த ரசிகர் அதற்குள் அவசரப்படுகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X