ரஜினிகாந்தின் 'தலைவர் 168' ஷூட்டிங் எப்போது?
சென்னை: சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 'தலைவர் 168' படத்தின் ஷூட்டிங்
எப்போது தொடங்குகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள தர்பார் படத்தில் நடித்திருக்கிறார் ரஜினிகாந்த். இதில்
அவர் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இதன் ஷூட்டிங் முடிந்துவிட்டது. பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது.

இதையடுத்து சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்துக்கு டி.இமான் இசை அமைக்கிறார். இதில், காமெடியனாக சூரி நடிக்கிறார்.
நடிகை கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், முன்னாள் ஹீரோயின்கள் குஷ்பு, மீனா ஆகியோர் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவிக்கப்பட்டது.
மன்னன், பாண்டியன், அண்ணாமலை உள்ளிட்ட படங்களில் ரஜினியுடன் நடித்த குஷ்பு, 28
வருடங்களுக்குப் பிறகு அவருடன் மீண்டும் நடிக்கிறார். நடிகை மீனா 24 வருடத்துக்கு பிறகு ரஜினியுடன் இணைந்துள்ளார்.
இந்நிலையில் இந்தப் படத்தின் ஷூட்டிங் வரும் 17 ஆம் தேதி ஐதராபாத், ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் தொடங்க இருக்கிறது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications











