தொடர்ந்து ட்ரெண்டிங்கில் தலைவர் 169 படம்.. சன் பிக்சர்ஸ் அறிவிப்புக்காக ரசிகர்கள் வெயிட்டிங்!

சென்னை : நடிகர் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்திற்கு பிறகு அடுத்ததாக தலைவர் 169 படத்தில் நடிக்கவுள்ளார்.

Recommended Video

Thalaivar 169 Title வேற லெவல், ரசிகர்கள் கொண்டாட்டம் *Kollywood | Filmibeat Tamil

இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார். இவரது பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், இந்தப் படத்தை வெற்றிப்படமாக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. முன்னதாக அண்ணாத்த படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரித்தது குறிப்பிடத்தக்கது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார். இது அவரது 168வது படமாக அமைந்தது. படத்தை இயக்குநர் சிவா இயக்கியிருந்தார். படத்தில் அண்ணன் -தங்கை பாசம் மையமாக பேசப்பட்டது. படத்தில் ரஜினிக்கு ஜோடியாகியிருந்தார் நடிகை நயன்தாரா. படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல்வேட்டை நடத்தியது.

தலைவர் 169 படம்

தலைவர் 169 படம்

இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக தலைவர் 169 படத்திற்காக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் இணையவுள்ளார் ரஜினிகாந்த். இதுகுறித்த அறிவிப்பு அவரது இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படத்தின் ரிலீசுக்கு முன்னதாகவே வெளியானது. பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், அவர் தலைவர் 169 படத்திலிருந்து நீக்கப்படுவார் என்று கூறப்பட்டது.

ரஜினியை இயக்கும் நெல்சன்

ரஜினியை இயக்கும் நெல்சன்

ஆயினும் அவர் ரஜினியை இயக்கவுள்ளது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. இந்தப் படத்திற்கான திரைக்கதையை அவர் தற்போது எழுதி வருவதாக அவரது நெருங்கிய நண்பரும் காமெடி நடிகருமான ரெடின் கிங்ஸ்லி நேற்றைய தினம் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்தப் படத்திற்காக அவர் வெறித்தனத்துடன் உழைத்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

ரெடின் கிங்ஸ்லி கேள்வி

ரெடின் கிங்ஸ்லி கேள்வி

மேலும் படத்தின் திரைக்கதையை கேஎஸ் ரவிக்குமார் மேற்கொள்ள உள்ளதாக கூறப்பட்ட தகவலையும் அவர் மறுத்துள்ளார். இதுபோன்ற விஷயங்களை யார்தான் பரப்புகிறார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இந்நிலையில், இந்தப் படம் குறித்த அறிவிப்பை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

சன் பிக்சர்ஸ் அறிவிப்பு

சன் பிக்சர்ஸ் அறிவிப்பு

இந்நிலையில் நேற்றைய தினம் சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று காலை 11 மணிக்கு அறிவிப்பை மேற்கொள்ளவுள்ளதாக கூறியுள்ளது. மேலும் ஸ்டார் படத்தையும் போட்டுள்ளது. இதனால் சூப்பர்ஸ்டாரின் தலைவர் 169 படம் குறித்த அறிவிப்பாக இது இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ஷங்கர் -ரஜினி கூட்டணி?

ஷங்கர் -ரஜினி கூட்டணி?

முன்னதாக இயக்குநர் ஷங்கர் மற்றும் அவரது மகள் அதீதி இருவரும் சூப்பர்ஸ்டாரை நேரில் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பும் கோலிவுட்டில் பல யூகங்களை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் இருவரும் மீண்டும் இணையவுள்ளார்களா என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ட்விட்டர் ட்ரெண்டிங்

ட்விட்டர் ட்ரெண்டிங்

இந்நிலையில் தலைவர் 169 படத்தின் ஹேஷ்டாக் தொடர்ந்து ட்விட்டர் ட்ரெண்டிங்கில் காணப்படுகிறது. நேற்று மாலை சன் பிக்சர்சின் ட்விட்டர் பதிவையடுத்து தொடர்ந்து ரசிகர்கள் இதனை ட்ரெண்டிங்கில் வைத்துள்ளனர். இன்னும் சிறிது நேரத்தில் அவர்களது கேள்விகளுக்கு சன் பிக்சர்ஸ் விடை கொடுக்கவுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X