தலைவர் 169 ஷூட்டிங் எப்போ ஆரம்பம் தெரியுமா? அந்த பண்டிகை தேதியில் படத்தை வெளியிட ரெடியான நெல்சன்!

சென்னை: ரஜினிகாந்தின் அண்ணாத்த படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்த நிலையில், மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

பீஸ்ட் படத்தை முடித்துவிட்டு தலைவர் 169 படத்திற்கான ப்ரீ ப்ரொடக்‌ஷன் பணிகளில் இயக்குநர் நெல்சன் இறங்கப் போவதாகவும் படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்க திட்டமிட்டு இருக்கிறார் உள்ளிட்ட ஹாட்டான அப்டேட்கள் கிடைத்துள்ளன.

நீண்ட நாட்களுக்கு பிறகு செம ஃபன்னான கதாபாத்திரத்தில் நடிகர் ரஜினிகாந்த் இந்த படத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தலைவர் 169

தலைவர் 169

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் உருவாக உள்ள ரஜினிகாந்தின் தலைவர் 169 படத்தின் செம மாஸான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதிலிருந்தே படம் எப்போது ஆரம்பமாகும் என்கிற கேள்வி தான் ரஜினி ரசிகர்கள் மத்தியில் தீயாக எழுந்துள்ளது. அதற்கான ஒரு ஹாட் அப்டேட் தான் தற்போது கசிந்துள்ளது.

நெல்சன் ஸ்கெட்ச்

நெல்சன் ஸ்கெட்ச்

நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தின் ஷூட்டிங்கை முடித்த கையோடு இயக்குநர் நெல்சன் தலைவர் 169 படத்தின் ஷூட்டிங்கை தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரஜினி படத்திற்காக சில ப்ரீ ப்ரொடக்‌ஷன் பணிகளில் கவனம் செலுத்த நெல்சன் திட்டமிட்டு இருப்பதாகவும், எந்தவொரு மிஸ்டேக்கும் வந்துவிடாமல் இருக்க எப்படி பிளான் போட வேண்டும் என்பதை சரியாக திட்டமிட்டு வருகிறாராம்.

ஷூட்டிங் எப்போ

ஷூட்டிங் எப்போ

பீஸ்ட் படம் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ள நிலையில், ஏப்ரல் மாதமே தலைவர் 169 படத்தின் ஷூட்டிங்கை நெல்சன் ஆரம்பிக்கப் போவதில்லையாம். அதற்கு பதிலாக, வரும் ஆகஸ்ட் மாதம் தான் படத்தின் படப்பிடிப்பை தொடங்குவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. அனைத்து ப்ரீ பிளான்களையும் செய்யும் பணிகளை ஆரம்பித்துள்ளாராம் இயக்குநர் நெல்சன்.

பொங்கல் ரிலீஸ்

பொங்கல் ரிலீஸ்

கடந்த தீபாவளிக்கு அண்ணாத்த திரைப்படம் வெளியான நிலையில், இந்த ஆண்டு தீபாவளிக்கு ரஜினிகாந்தின் 169வது படம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கிடக்கும் நிலையில், 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை குறிவைத்து தலைவர் 169 திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

மாஸ் காமெடி

மாஸ் காமெடி

இதுவரை நெல்சன் இயக்கிய படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு தலைவர் 169 படம் மாஸ் பிளஸ் காமெடி திரைப்படமாக உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினிகாந்தின் உடல்நலத்தையும் கவனத்தில் கொண்டு ஷூட்டிங் ஸ்பாட்டில் என்ன என்ன பாதுகாப்புகளை மேற்கொள்ள வேண்டும் என ஏகப்பட்ட முன்கூட்டிய திட்டமிடலில் முழு கவனத்தை செலுத்தி வருகிறாராம் நெல்சன். அடுத்த ஆண்டு பொங்கல் அப்போ தலைவர் பொங்கல் தான் போல..

தமிழ் டைட்டில்

தமிழ் டைட்டில்

கோலமாவு கோகிலா படத்தின் டைட்டில் தமிழில் இருந்த நிலையில், டாக்டர் மற்றும் பீஸ்ட் என நெல்சன் இயக்கத்தில் அடுத்தடுத்து உருவான படங்களின் தலைப்பு ஆங்கிலத்தில் உள்ள நிலையில், இந்த படத்திற்கான டைட்டிலையும் செம மாஸாக வைக்கப் போகிறார் என்றும், இந்த முறை தமிழ் தலைப்பை அதற்காக தேர்வு செய்திருப்பதாகவும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X