விஸ்வரூபம் எடுக்கும் வேல்ஸ்.. ’தலைவர் 169’ படத்தை இயக்கும் கெளதம் மேனன்?

Recommended Video

Thalaivar 169 Update | Rajinikanth | Gaautham menon

சென்னை: வரும் பொங்கலுக்கு ரஜினியின் தர்பார் படம் ரிலீசாக உள்ளது. தர்பார் படத்தின் பணிகளை முடித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் 'தலைவர் 168' படத்தில் நடிக்கவுள்ளார்.

ரஜினிகாந்த் பிறந்த நாளான டிசம்பர் 12ம் தேதி 'தலைவர் 168' படப்பிடிப்பு ஆரம்பமாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், 'தலைவர் 169' படம் குறித்த மாஸ் அப்டேட் வெளியாகியுள்ளது.

சும்மா கிழி

லைகா நிறுவனம் தயாரிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘சும்மா கிழி' இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது. விவேக் வரிகளில் அனிருத் இசையமைக்க ரஜினியின் இன்ட்ரோ பாடல்களை பாடி வரும் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இந்த பாடலை பாடியுள்ளார். வரும் பொங்கலுக்கு படம் ரிலீசாகவுள்ளதால், விளம்பர பணிகளை விரைவு படுத்தி வருகிறது லைகா நிறுவனம்.

தலைவர் 168

தலைவர் 168

சிறுத்தை சிவா இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான விஸ்வாசம் படம் மாபெரும் வெற்றியை பெற்ற நிலையில், அடுத்ததாக ரஜினியின் 168வது படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் மற்றும் ஜோதிகா நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார்.

விஸ்வரூப வேல்ஸ்

விஸ்வரூப வேல்ஸ்

சமீபத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பிரம்மாண்ட வெற்றி விழாவை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் கொண்டாடியது. அதன் தயாரிப்பில் வெளியான எல்.கே.ஜி., கோமாளி படங்களின் வெற்றி விழாவும் படக்குழுவினருக்கு விருதும் வழங்கப்பட்டது. மேலும், கடன் சுமையால் தவித்து வந்த கெளதம் மேனனின் எனை நோக்கிப் பாயும் தோட்டா படத்தை ரிலீஸ் செய்ய உதவி செய்துள்ளது. ஜோஷ்வா இமை போல் காக்க படத்தை வேல்ஸ் நிறுவன தயாரிப்பில் கெளதம் மேனன் இயக்கி வருகிறார்.

தலைவர் 169

ரஜினியின் தர்பார் ரிலீசுக்கு ரெடியாகியுள்ள நிலையில், அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது. அதற்கடுத்து, ரஜினிகாந்த் கெளதம் மேனன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்றும் அந்த படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கப்போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X