என்னடா தலைவர் 170 ஹீரோயின்.. தலைகீழா காஞ்சுரிங் போல மாறி மிரட்டுறாரே.. வித்தைக்காரியா இருப்பாரோ!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தலைவர் 170 படத்தில் இணைந்துள்ள நடிகை ரித்திகா சிங் தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோ பார்ப்பவர்களை சட்டென கவர்ந்து வருகிறது.

சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரித்திகா சிங். அந்தப் படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் ஆண்டவன் கட்டளை, ராகவா லாரன்ஸ் உடன் சிவலிங்கா, அசோக் செல்வனுடன் ஓ மை கடவுளே மற்றும் விஜய் ஆண்டனியுடன் கொலை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும், துல்கர் சல்மானின் கிங் ஆஃப் கொத்தா திரைப்படத்தில் இடம்பெற்ற கலாபக் காரா பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருந்தார்.

Thalaivar 170 actress Ritika Singh recent workout video stuns fans

அடுத்ததாக ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உள்ள தலைவர் 170 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ரித்திகா சிங் நடித்து வருகிறார்.

ரஜினி படத்தில் ரித்திகா சிங்: ரஜினிகாந்துடன் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், மலையாள நடிகர்கள் மஞ்சு வாரியர் மற்றும் பகத் பாசில், டோலிவுட் நடிகர் ராணா டகுபதி மற்றும் கோலிவுட்டின் இளம் நடிகை துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். மேலும், இந்த பெரிய நட்சத்திரப் பட்டாளத்துடன் நடிகை ரித்திகா சிங்கும் இணைந்துள்ளார்.

சினிமாவுக்கு வருவதற்கு முன்னதாக குத்துச்சண்டை வீராங்கனையாக இருந்த ரித்திகா சிங் தொடர்ந்து தற்போது இன்ஸ்டாகிராமில் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை தனது பாலகர்களாக மாற்றி வருகிறார். 4 மில்லியன் ரசிகர்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொண்டுள்ள ரித்திகா சிங் அடிக்கடி உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை ஜில்லாக்கி வருகிறார்.

காஞ்சுரிங் பேய் போல: இந் நிலையில் தற்போது அவர், தனது உடலை வில்லாக வளைத்து அப்படியே தலைகீழாக காஞ்சுரிங் பேய் போல மாறுவது போல செய்யும் வொர்க்கவுட் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதை பார்த்து ரசிகர்கள் நூடுல்ஸ் மண்டைக்கு இப்படி ஒரு திறமை இருக்கிறதா என கமெண்ட் போட்டு லைக்குகளை குவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X