Thalaivar 170: தலைவர் 170ல் ரஜினிக்குப் பிறகு அதிக சம்பளம் ஃபஹத் பாசிலுக்கு தான்... இத்தனை கோடியா?

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் தலைவர் 170 படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கியது.

தசெ ஞானவேல் இயக்கும் இந்தப் படத்தில் ஃபஹத் பாசில் முக்கியமான கேரக்டரில் நடிக்கவுள்ளார்.

கடந்தாண்டு வெளியான கமலின் விக்ரம் படத்திலும் ஃபஹத் பாசில் லீட் ரோலில் நடித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது ரஜினியின் தலைவர் 170 படத்தில் நடிக்க ஃபஹத் பாசிலுக்கு வழங்கப்பட்ட சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

 Thalaivar 170: Fahadh Faasils Salary is 10 crore for the Thalaivar 170

தலைவர் 170ல் ஃபஹத் பாசில் சம்பளம்: சூப்பர் ஸ்டார் ரஜினியின் தலைவர் 170 திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது. நேற்று திருவனந்தபுரத்தில் நடைபெற்ற தலைவர் 170 பூஜையில், ரஜினி, இயக்குநர் தசெ ஞானவேல், மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதனையடுத்து திருவனந்தபுரத்திலேயே படப்பிடிப்பும் தொடங்கியது. லைகா தயாரிப்பில் தசெ ஞானவேல் இயக்கும் தலைவர் 170 அடுத்தாண்டு சம்மரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், மல்லுவுட் மாஸ் ஹீரோ ஃபஹத் பாசில், டோலிவுட் ஹீரோ ராணா மூவரும் லீட் ரோலில் நடிக்கின்றனர். அவர்களுடன் மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் ஆகியோரும் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. தலைவர் 170 படத்தின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் செம்ம மாஸ்ஸான போஸ்டரையும் படக்குழு வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் இந்தப் படத்திற்காக ஃபஹத் பாசிலுக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்து தெரியவந்துள்ளது. மலையாளத்தில் ஹீரோவாக அறிமுகமான ஃபஹத் பாசில், கடந்த சில வருடங்களாக வெரைட்டியான நடிகராக மாஸ் காட்டி வருகிறார். மலையாளம் மட்டுமின்றி தெலுங்கில் புஷ்பா, தமிழில் வேலைக்காரன், விக்ரம், மாமன்னன் என ஃபஹத் பாசிலின் சம்பவங்கள் ரொம்பவே அதிகம்.

முக்கியமாக கமலின் விக்ரம் படத்தில் அமர் என்ற ஏஜெண்ட் கேரக்டரில் ஃபஹத் பாசில் துவம்சம் செய்திருந்தார். அதேபோல் மாமன்னன் படத்திலும் அவரது வில்லத்தனமான நடிப்பு பெரிய வரவேற்பைப் பெற்றது. இதனால், தலைவர் 170 படத்தை வெயிட்டேஜ்ஜை அதிகரிக்க ஃபஹத் பாசிலை சீனில் கொண்டு வந்தது லைகா. இதற்காக அவருக்கு பல கோடிகளில் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாம்.

இந்தியாவிலேயே பயங்கர பிஸியான நடிகர்களில் ஒருவரான ஃபஹத் பாசில், படத்தின் பட்ஜெட்டுக்கேற்ப தான் சம்பளம் வாங்கி வருகிறார். இந்நிலையில் தலைவர் 170 படத்திற்காக ரஜினிக்கு 90 கோடி ரூபாய் வரை சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாம். அவருக்கு அடுத்தபடியாக ஃபஹத் பாசிலுக்கு 10 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம் நடிகர்களின் சம்பளம் தவிர்த்துவிட்டு படத்தின் மொத்த பட்ஜெட்டே 30 கோடி ரூபாய் தான் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X