Thalaivar 170: மங்காத்தா BGM-ல் தலைவர் 170 டீம் அப்டேட்... சூப்பர் ஸ்டார் கோட்டையில் அஜித் கொடி!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் தலைவர் 170 படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் இன்று பூஜையுடன் தொடங்கியது.
தசெ ஞானவேல் இயக்கத்தில் லைகா புரொடக்ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது.
முன்னதாக தலைவர் 170 படத்தின் டீம் அப்டேட்டை கடந்த மூன்று தினங்களாக படக்குழு வெளியிட்டது.
அதனை அஜித்தின் மங்காத்தா படத்தின் பிஜிஎம் உடன் ரீ-கிரியேட் செய்து ரசிகர்கள் அலப்பறையை கிளப்பியுள்ளனர்.

மங்காத்தா BGM-ல் தலைவர் 170 டீம் அப்டேட்
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வெளியாகி மரணமாஸ் ஹிட் அடித்தது. கமர்சியலாக வெற்றிப் பெற்ற ஜெயிலர், பாக்ஸ் ஆபிஸில் 600 கோடி ரூபாய் வசூலித்தது. இதனால் ரஜினியின் லால் சலாம் மீதும் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல், ரஜினியின் தலைவர் 170 படத்துக்கும் ஹைப் காணப்படுகிறது.
தசெ ஞானவேல் இயக்கத்தில் லைகா தயாரிக்கவுள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதனையடுத்து கடந்த மூன்று தினங்களாக ரசிகர்களுக்கு தலைவர் 170 அப்டேட்டை வெளியிட்டது படக்குழு. அதன்படி, லைகா சுபாஸ்கரன், தசெ ஞானவேல், அனிருத், துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா, ஃபஹத் பாசில், அமிதாப் பச்சன் ஆகியோர் நடிப்பது உறுதியானது.
அதேபோல், சூப்பர் ஸ்டார் ரஜினியின் போஸ்டரையும் இன்று லைகா நிறுவனம் வெளியிட்டது. சிவாஜி படத்திற்குப் பின்னர் ரஜினியின் லுக் செம்ம இளமையான தோற்றத்தில் மாஸ் காட்டினார். அதே லுக்கில் இன்று திருவனந்தபுரத்தில் நடைபெற்ற தலைவர் 170 பூஜையிலும் ரஜினி கலந்துகொண்டார். இந்த புகைப்படங்கள் டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகின்றன.
இந்நிலையில், தலைவர் 170 டீம் அப்டேட் போஸ்டரை ரசிகர்கள் வேற லெவலில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அதாவது அஜித்தின் மங்காத்தா படத்தில் வரும் பிஜிஎம்-ல் தலைவர் 170 ஸ்குவாட் போஸ்டரை வைத்து எடிட் செய்து மாஸ் காட்டியுள்ளனர். மங்காத்தா படத்தில் வைபவிடம் அர்ஜுன் விசாரிக்கும் காட்சியில், அஜித்துக்கு ஹைப் கொடுத்து டயலாக் வரும். அதே வசனத்தை தலைவர் 170 டெம்ப்ளேட்டில் கிரியேட் செய்து அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்


Click it and Unblock the Notifications











