Thalaivar 170: பக்கெட் பிரியாணி பட்ஜெட்டில் தலைவர் 170... ரஜினி சம்பளத்தில் கூட லைகா உஷாரு தான்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் தலைவர் 170 படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியது.

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற தலைவர் 170 பட பூஜையில் ரஜினி, இயக்குநர் ஞானவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதனையடுத்து தலைவர் 170 படப்பிடிப்பு வேகமாக நடைபெறவுள்ளது.

இந்நிலையில், தலைவர் 170 படத்துக்காக லைகா நிறுவனம் ஒதுக்கிய பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

 Thalaivar 170: Lyca budgeted only 30 crores for Rajinikanths Thalaivar 170 film

தலைவர் 170 மொத்த பட்ஜெட்டே இவ்வளவு தானா?: ஜெயிலர் மூலம் வெறித்தனமான கம்பேக் கொடுத்த சூப்பர் ஸ்டார், அடுத்து தலைவர் 170 படப்பிடிப்பில் பிஸியாகிவிட்டார். லைகா தயாரிப்பில் லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் நடித்த சூப்பர் ஸ்டார், தலைவர் 170-ல் ஹீரோவாக நடிக்கவுள்ளார். தசெ ஞானவேல் இயக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அதுமட்டும் இல்லாமல் வெயிட்டான கூட்டணியில் உருவாகிறது தலைவர் 170.

அதன்படி, இந்தப் படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், மல்லுவுட் மாஸ் ஹீரோ ஃபஹத் பாசில், டோலிவுட் ஹீரோ ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் ஆகியோர் லீடிங் ரோலில் நடிக்கின்றனர். இதனால் தலைவர் 170 படம் மீதான எதிர்பார்ப்பு தாறுமாறாக எகிறிப்போயுள்ளது. இந்த அப்டேட்களைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினியின் செம்ம மாஸ்ஸான போஸ்டரும் வெளியானது. ரஜினியின் லுக், ஹேர் ஸ்டைல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் இந்தப் படத்திற்காக லைகா ஒதுக்கியுள்ள பட்ஜெட் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. பொன்னியின் செல்வன், இந்தியன் 2 உட்பட லைகா பேனரில் உருவாகும் படங்கள் பெரும்பாலும் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகின்றன. ஆனால், தலைவர் 170 படத்திற்காக லைகா ஒதுக்கிய பட்ஜெட் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது ரஜினிகாந்த் உட்பட மற்ற நடிகர்களின் சம்பளத்தை தவிர்த்துவிட்டு மொத்தமே 30 கோடி ரூபாய் மட்டுமே பட்ஜெட் போடப்பட்டுள்ளதாம்.

தசெ ஞானவேல் இயக்கிய ஜெய்பீம் ரொம்பவே குறைவான பட்ஜெட்டில் உருவான படம் தான். ஆனால், அது நேரடியாக அமேசான் ப்ரைமில் வெளியானது. அதேபோல், தலைவர் 170 படத்தையும் மினிமம் பட்ஜெட்டில் எடுத்துவிடலாம் என பிளான் செய்துள்ளாராம் தசெ ஞானவேல். தலைவர் 170ல் பிரம்மாண்டமான காட்சிகளுக்கு இடமில்லை என்பதால் தான் இந்த பட்ஜெட் என்றும் சொல்லப்படுகிறது.

அதேபோல் ரஜினிக்கும் 90 கோடி ரூபாய் மட்டுமே சம்பளம் கொடுக்க முடிவு செய்துள்ளதாம் லைகா. ஜெயிலர் படத்திற்காக ரஜினிகாந்த் 150 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கியதாக சொல்லப்படுகிறது. ஆனால், தலைவர் 170 படத்தின் பட்ஜெட்டே மிக குறைவு என்பதால், ரஜினிக்கும் 90 கோடிக்கும் மேல் வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. ரஜினி தவிர மற்ற நடிகர்களுக்கு மொத்தமாக 40 கோடி ரூபாயை சம்பளமாக ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X