Thalaivar 170: தலைவர் 170 படத்தில் ரஜினியுடன் நடிக்க விருப்பமா... லைகா கொடுத்த சூப்பர் ஆஃபர்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் வரும் 10ம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இதனைத் தொடர்ந்து தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளா லால் சலாம் படத்தில் ரஜினி நடித்துள்ளார்.

 Thalaivar 170: Lyca has announced the casting call for Rajinis Thalaivar 170

இப்படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்ட நிலையில், சீக்கிரமே தலைவர் 170 படப்பிடிப்பை தொடங்க இயக்குநர் தசெ ஞானவேல் ரெடியாகிவிட்டார்.

இதில் ரஜினியுடன் நடிக்க விருப்பம் உள்ளவர்களுக்கு லைகா நிறுவனம் தரப்பில் இருந்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தலைவர் 170ல் ரஜினியுடன் நடிக்க விருப்பமா..?
ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கியுள்ள ஜெயிலர் அடுத்த வாரம் வெளியாகவுள்ளது. ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவைத் தொடர்ந்து படத்தின் ட்ரெய்லரும் வெளியாகி மாஸ் காட்டி வருகிறது. ஜெயிலரை அடுத்து லைகா நிறுவனம் தயாரிக்கும் இரண்டு படங்களில் கமிட்டாகியிருந்தார் ரஜினி. அதில் ஒரு படத்தை அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் டைரக்ட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

'லால் சலாம்' என்ற டைட்டிலில் உருவாகியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் சில வாரங்களுக்கு முன்னர் முடிவுக்கு வந்தது. விஷ்ணு விஷால், விதார்த் ஹீரோவாக நடித்துள்ள லால் சலாம் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கேமியோ ரோலில் நடித்துள்ளார். கிரிக்கெட்டை பின்னணியாக வைத்து ஸ்போர்ட்ஸ் ஜானரில் உருவாகும் இந்தப் படத்தில் இருந்து ரஜினியின் போஸ்டர் ஏற்கனவே வெளியாகிவிட்டது.

லைகா தயாரிக்கும் ரஜினியின் மற்றொரு படமான தலைவர் 170-ஐ தசெ ஞானவேல் இயக்குகிறார். ஜெய்பீம் படத்தின் வெற்றிக்குப் பிறகு தசெ ஞானவேலும் முன்னணி இயக்குநர் லிஸ்ட்டில் இணைந்துவிட்டார். இந்நிலையில், இந்தப் படத்தில் ரஜினியுடன் ஏராளமான புதுமுகங்களை நடிக்க வைக்க லைகா முடிவு செய்துள்ளதாம். அதனால் அதற்கென ஒரு ஆடிஷனை நடத்தவும் படக்குழு திட்டமிட்டுள்ளது. பயிற்சிப் பெற்ற நடிகர்களுக்காக இந்த ஆடிஷன் நடைபெறுகிறதாம்.

அதன்படி, லைகா நிறுவனம் நடத்தும் இந்த ஆடிஷனில் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட், பயிற்சிப் பெற்ற நடிகர்கள் கலந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விருப்பம் உள்ளவர்கள் அவர்களது போட்டோவுடன் கூடிய விவரங்களை குறிப்பிட்ட வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்ப வேண்டும் எனவும் லைகா தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. லைகா நிறுவனத்தின் இந்த அறிவிப்பு பலருக்கும் சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது.

இந்நிலையில் இதில் தேர்வாகும் நபர்கள், தலைவர் 170 படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக லால் சலாம் படத்திற்கும் ரஜினியுடன் நடிக்க ஏராளமான புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X