Thalaivar 170: விக்ரம், அர்ஜுன் லிஸ்ட்டில் நானி... தலைவர் 170-ல் ரஜினிக்கு வேற வில்லனே கிடைக்கலயா?

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜெயிலர் படத்தில் நடித்துள்ள ரஜினி, அடுத்து லைகா பேனரில் 2 படங்களில் நடிக்கிறார்.

அதில், தசெ ஞானவேல் இயக்கும் 'தலைவர் 170' படம் குறித்து அடுத்தடுத்து அப்டேட்கள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன.

இப்படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

 Thalaivar 170: Nani will replace Vikram and Arjun as the villain in Thalaivar 170 film

அதேபோல், ரஜினிக்கு வில்லனாக டோலிவுட் முன்னணி ஹீரோ நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தலைவர் 170 வில்லன் ரேஸில் டோலிவுட் ஹீரோ:நெல்சன் இயக்கிய ஜெயிலர், ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் என இரண்டு படங்களை முடித்துவிட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினி. இதில் நெல்சனின் ஜெயிலர் வரும் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ஜெயிலர் ரஜினிக்கு தரமான கம்பேக் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லால் சலாம், இந்தாண்டு இறுதி அல்லது 2024 தொடக்கத்தில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இதில் ரஜினி மொய்தீன் பாய் என்ற கேமியோ கேரக்டரில் தான் நடித்துள்ளார். ஆனாலும் லால் சலாம் படத்தை பார்க்க ரஜினி ரசிகர்கள் இப்போதே காத்திருக்கின்றனர். இதன் தொடர்ச்சியாக ரஜினியின் மேலும் ஒரு படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

தலைவர் 170 என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை தசெ ஞானவேல் இயக்கவுள்ளார். அதேபோல், அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளதையும் படக்குழு கன்ஃபார்ம் செய்துவிட்டது. மேலும், ஜெயிலர், லால் சலாம் படப்பிடிப்பு முடிந்துவிட்டதால், விரைவில் தலைவர் 170 ஷூட்டிங்கை தொடங்க படக்குழு ரெடியாகிவிட்டதாம். தசெ ஞானவேல் - ரஜினி கூட்டணி முதன்முறை இணைந்துள்ளது, படம் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ரஜினியுடன் நடிக்கும் நடிகர்கள், டெக்னீஷியன்கள் யார் யார் என்பதையும் தசெ ஞானவேல் முடிவு செய்து வருகிறாராம். தலைவர் 170 படத்தில் ரஜினி ரிட்டையர்டு போலீஸ் ஆபிஸராக நடிப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் ரஜினிக்கு வில்லனாக சீயான் விக்ரம் அல்லது அர்ஜுன் நடிக்கலாம் என சொல்லப்பட்டது. முக்கியமாக விக்ரமிற்கு 50 கோடி ரூபாய் வரை சம்பளம் கொடுக்க லைகா தரப்பு ரெடியாக இருந்தது.

 Thalaivar 170: Nani will replace Vikram and Arjun as the villain in Thalaivar 170 film

ஆனாலும் விக்ரம் மறுத்துவிட்டதால், அடுத்து ஆக்‌ஷன் கிங் அர்ஜுனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பின்னர் அவரும் இந்த ஆஃபருக்கு நோ சொல்லிவிட்டாராம். இதனால் தற்போது தெலுங்கு நடிகர் நானி, தலைவர் 170ல் வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நானி தெலுங்கில் முன்னணி ஹீரோவாக இருந்தாலும், ரஜினிக்கு வில்லனாக நடிக்கும் அளவிற்கு கெத்தான நடிகர் கிடையாது என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

இதனிடையே தலைவர் 170 படத்தில் ரஜினியுடன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிப்பதாகவும் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும் இதுகுறித்து படக்குழு தரப்பில் இருந்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X