Thalaivar 170 pooja: டைனோசர் வேகத்தில் ரஜினிகாந்த்.. தலைவர் 170 படத்தின் பூஜை எப்போ தெரியுமா?
சென்னை: ஜெயிலர் திரைப்படம் 500 கோடி வசூலை நெருங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், அடுத்த சம்பவத்தை செய்ய தலைவர் 170 படத்தின் பூஜையை இந்த மாதமே போட ரஜினிகாந்த் முடிவு செய்து விட்டதாக அதிரடி அப்டேட்கள் வெளியாகி உள்ளன.
ஜெய்பீம் படத்தை இயக்கி ஒட்டுமொத்த உலகையே தமிழ் சினிமா பக்கம் திரும்பி பார்க்க வைத்த இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் அடுத்து நடிக்க உள்ளார்.

அந்த படத்தில் யாரெல்லாம் நடிக்க உள்ளனர் என்றும் படத்தின் பூஜை எந்த தேதியில் எங்கே பிரம்மாண்டமாக நடக்கிறது போன்ற தகவல்கள் தற்போது கசிந்துள்ளன.
டைனோசர் வேட்டை: ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்தை டைனோசர் என அவரது மகனாக நடித்த வசந்த் ரவி சொல்லும் வசனம் இடம்பெற்றிருக்கும். பிரபாஸ் சலார் படத்தில் டைனோசராக வருவதற்கு முன்பாகவே ஜெயிலர் மூலம் ரஜினிகாந்த் டைனோசராக மாறிவிட்டார்.
ஜெயிலர் திரைப்படம் 2 வாரங்கள் முடிந்து 3வது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், 500 கோடி வசூலை அந்த படம் எட்டி விட்டதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. சமீபத்தில் பேட்டியளித்த நடிகர் விஜய் தேவரகொண்டாவும் ஜெயிலர் திரைப்படம் 500 கோடி வசூல் ஈட்டியதாக கூறியிருந்தார்.
தலைவர் 170 நடிகர்கள்: த.செ. ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் என்கவுன்ட்டருக்கு எதிரான போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், இந்த படத்தில் அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், மஞ்சு வாரியர், சர்வானந்த் உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்க வாய்ப்புகள் அதிகம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

தலைவர் 170 பட பூஜை: வரும் ஆகஸ்ட் 26ம் தேதி சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் தலைவர் 170 படத்தின் பூஜை பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாக அதிரடி அப்டேட்கள் தற்போது வெளியாகி உள்ளன. மேலும், அடுத்த மாதம் செப்டம்பர் 19ம் தேதி முதல் தலைவர் 170 படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என்றும் அப்டேட்கள் கசிந்துள்ளன.
ஜெயிலர் படம் மாஸ் கமர்ஷியல் படமாக இருந்த நிலையில், ஜெய்பீம் திரைப்படம் போல கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து விருதுகளை குவிக்கும் படமாக தலைவர் 170 படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











