Thalaivar 170: தலைவர் 170-ல் வில்லன் என்ட்ரி ஆரம்பம்... ரஜினியுடன் மோதும் ஃபஹத் பாசில்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார்.

தசெ ஞானவேல் இயக்கும் இந்தப் படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்து வருகிறது.

Thalaivar 170: Rajini - Fahadh Faasil scenes to be filmed in the current Chennai schedule

தலைவர் 170 படப்பிடிப்பு திருவனந்தபுரம், கன்னியாகுமரி, நெல்லை, மும்பை பகுதிகளில் நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக தற்போது சென்னையில் தொடங்கிய தலைவர் 170 படப்பிடிப்பில், ஃபஹத் பாசில் நடித்து வருகிறாராம்.

ரஜினியுடன் இணைந்த ஃபஹத் பாசில்
ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினியின் லால் சலாம் பொங்கலுக்கு வெளியாகிறது. இன்னொரு பக்கம் தலைவர் 170 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். ஜெய்பீம் திரைப்படம் மூலம் திரும்பிப் பார்க்க வைத்த தசெ ஞானவேல், தலைவர் 170-ஐ இயக்கி வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

தலைவர் 170 படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் பூஜையுடன் தொடங்கியது. அதன்பின்னர் நெல்லை, கன்னியாகுமரி, மும்பையில் தொடர்ந்து நடைபெற்றது. இதில் மும்பையில் ரஜினி - அமிதாப் பச்சன் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. கேமியோ ரோலில் நடிக்கும் அமிதாப் பச்சனின் காட்சிகள், 15 நிமிடங்கள் வரை தான் இருக்கும் என சொல்லப்படுகிறது. இதனையடுத்து மும்பையில் இருந்து சென்னை திரும்பினார் ரஜினி.

தீபாவளி பிரேக்கிற்குப் பின்னர் மீண்டும் தலைவர் 170 ஷூட்டிங் தொடங்கியது. அதன்படி தற்போது சென்னையில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் மலையாள நடிகர் ஃபஹத் பாசிலும் பங்கேற்றுள்ளாராம். இதனையடுத்து ரஜினிகாந்த் - ஃபஹத் பாசில் இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகளை படமாக்கி வருகிறார் தசெ ஞானவேல். தலைவர் 170 படத்தில் ஃபஹத் பாசில் தான் வில்லனாக நடிப்பதாக சொல்லப்படுகிறது.

இதனால், ரஜினி - ஃபஹத் பாசில் இருவருக்குமான சில முக்கியமான காட்சிகள் ஷூட் செய்யப்பட்டு வருகிறதாம். சென்னை ஷெட்யூல் முடிந்ததும் மீண்டும் நெல்லையில் தலைவர் 170 ஷூட்டிங் நடைபெறும் என சொல்லப்படுகிறது. அமிதாப் பச்சனை தொடர்ந்து ஃபஹத் பாசிலுடன் நடித்து வருகிறார் தலைவர். இதன் தொடர்ச்சியாக ராணா, மஞ்சு வாரியர் ஆகியோரும் ரஜினியுடன் இணையவுள்ளனர்.

வேகமாக நடைபெற்று வரும் தலைவர் 170 ஷூட்டிங், அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்திற்குள் நிறைவடைந்துவிடும் என சொல்லப்படுகிறது. மேலும், இந்தப் படத்தை 2024 சம்மர் ஸ்பெஷலாக வெளியிட லைகா நிறுவனம் முடிவு செய்துள்ளதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X