Thalaivar170: மொத்தமே 50 நாட்கள்தான் கால்ஷீட்... பரபரக்கும் தலைவர் 170 ஸ்பாட்... அடுத்து தலைவர் 171
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் வரும் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இப்படத்திற்கான ஆன்லைன் புக்கிங் தொடங்கிவிட்டதால் ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
இன்னொரு பக்கம் ரஜினியின் தலைவர் 170 படத்தின் அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன.

அதன்படி தற்போது தலைவர் 170 படத்தின் ஷூட்டிங், ரஜினியின் கால்ஷீட் குறித்து லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகியுள்ளன.
50 நாட்கள் மட்டுமே கால்ஷூட் கொடுத்த ரஜினி: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு ரஜினியின் ஃபேன்பாய் சம்பவமாக ஜெயிலர் இருக்கும் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில், ஜெயிலர் வெளியானதும் தலைவர் 170 படத்தில் கவனம் செலுத்த உள்ளாராம் ரஜினி.
லைகா தயாரிப்பில் உருவாகவுள்ள இந்தப் படத்தை ஜெய்பீம் புகழ் தசெ ஞானவேல் இயக்கவுள்ளார். அதேபோல், அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளதையும் படக்குழு கன்ஃபார்ம் செய்துவிட்டது. தலைவர் 170 படத்தின் ப்ரீ புரொடக்ஷன் வேலைகளை முடித்துவிட்ட ஞானவேல், படப்பிடிப்பையும் விரைவில் ஆரம்பிக்கவுள்ளாராம். அதற்காக சூப்பர் ஸ்டாரும் கால்ஷீட் கொடுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
மொத்தமே 50 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்துள்ள ரஜினி, செப்டம்பர் முதல் அக்டோபர் வரை தலைவர் 170 படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளாராம். ரஜினியின் போர்ஷன் முழுவதையும் ஒரே ஷெட்யூலில் முடித்துவிட இயக்குநர் ஞானவேலும் ரெடியாகிவிட்டாராம். இதனிடையே இந்தப் படத்தில் ரஜினியுடன் நானி, அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், மஞ்சு வாரியர் ஆகியோர் நடிப்பதும் உறுதியாகியுள்ளது.

இதில் நானியின் கேரக்டர் 20 நிமிடங்கள் மட்டுமே இருக்கும் என சொல்லப்படுகிறது. அதேநேரம் ஃபஹத் பாசில் தான் மெயின் வில்லன் என்றும், அவருக்கும் ரஜினிக்கும் இடையேயான காட்சிகள் செம்ம மாஸ்ஸாக இருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தலைவர் 170 படத்தின் மொத்த படப்பிடிப்பையும் இந்தாண்டு இறுதிக்குள் முடித்துவிட்டு, 2024 சம்மரில் ரிலீஸ் செய்ய லைகா பிளான் செய்துள்ளதாம்.
இன்னொரு பக்கம் தலைவர் 171 கதையுடன் லோகேஷ் கனகராஜ்ஜும் ரெடியாகிவிட்டாராம். ரஜினி - லோகேஷ் கூட்டணியில் உருவாகும் இப்படத்தின் ஷூட்டிங், நவம்பரில் தொடங்கும் எனவும், அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் முடிவுக்கு வரும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெயிலர் ரிலீஸானதும் அதே வேகத்தில் தலைவர் 170 டைட்டில், ஷூட்டிங் அப்டேட்டை வெளியிட லைகா முடிவு செய்துள்ளதாம்.


Click it and Unblock the Notifications











