Thalaivar 170: சூர்யாவுக்கு நோ... வீண் பிடிவாதம் பிடிக்கும் ரஜினி... கலக்கத்தில் தலைவர் 170 டீம்

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது ஜெயிலர், லால் சலாம் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இதனையடுத்து தசெ ஞானவேல் இயக்கும் தலைவர் 170 படத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் சூர்யாவை ஒரு கேமியோ ரோலில் நடிக்க வைக்க இயக்குநர் தசெ ஞானவேல் திட்டமிட்டதாக தெரிகிறது.

ஆனால், இதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினி கொடுத்துள்ள பதில் தலைவர் 170 படக்குழுவினருக்கு ஷாக்கிங்காக அமைந்துள்ளது.

 Thalaivar 170: Rajinikanth refused to cast Suriya in the Thalaivar 170 film

சூர்யாவுக்கு நோ சொன்ன ரஜினி:ரஜினி நடித்து வரும் ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதாம். நெல்சன் இயக்கும் இந்தப் படம் தீபாவளிக்கு முன்பே வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளார் ரஜினி.

ஜெயிலர், லால் சலாம் ஷூட்டிங் முடிந்ததும் தலைவர் 170 படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி. தசெ ஞானவேல் இயக்கும் இந்தப் படத்தை லைகா புரொடக்‌ஷன் தயாரிக்கிறது. தலைவர் 170-இல் ரஜினி ரிட்டையர்டு போலீஸ் ஆபிஸர் கேரக்டரில் நடிப்பதாகவும், தூக்குத் தண்டனைக்கு எதிரான பின்னணியில் இந்தப் படம் உருவாகவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், தலைவர் 170 படத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாக ஒரு தகவல் வேகமாக பரவியது. ஞானவேல் இயக்கிய ஜெய் பீம் படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். அதேபோல், கமல் - லோகேஷ் கூட்டணியில் உருவான விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற டெரர் வில்லனாக நடித்திருந்தார். இந்த இரண்டு கேரக்டர்களும் சூர்யாவுக்கு நல்ல ரீச் ஆனது.

இதனால், தலைவர் 170 படத்திலும் சூர்யாவை ஒரு கேமியோ ரோலில் நடிக்க வைக்க ஞானவேல் திட்டமிட்டிருந்தாராம். ஆனால், ரஜினி அதற்கு நோ சொல்லிவிட்டதாக தெரிகிறது. தனது படங்களில் தான் மட்டுமே லீடிங் ரோலில் நடிக்க வேண்டும் என்பதில் ரஜினி எப்போதும் கவனமாக இருப்பார். அதனால் தான் இன்றுவரை ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார் ரஜினி.

 Thalaivar 170: Rajinikanth refused to cast Suriya in the Thalaivar 170 film

அதனால், எந்த காரணம் கொண்டும் தலைவர் 170 படத்தில் முன்னணி ஹீரோக்கள் இருக்கக் கூடாது என கண்டிஷன் போட்டுள்ளாராம். ஜெயிலர் படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக முதலில் சொல்லப்பட்டது. அதுவும் ரஜினியின் மகனாக நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அது பொய் என பின்னர் தெரியவந்தது. அதேபோல் தற்போது தலைவர் 170 படத்தில் சூர்யா நடிப்பதாக வெளியான தகவலும் வதந்தி என்றே சொல்லப்படுகிறது.

இன்னொரு பக்கம் தனது கடைசிப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க வேண்டும் என ரஜினி விருப்பம் தெரிவித்துள்ளார். விக்ரம் படத்திற்கு முன்பாகவே இந்தக் கூட்டணி இணையவிருந்ததாகவும், மல்டி ஸ்டார் கதையாக இருந்ததால் தான் ரஜினி நோ சொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தலைவர் 170 படத்தில் சூர்யாவுக்கு ரஜினி நோ சொல்லிவிட்டதால், இயக்குநர் தசெ ஞானவேல் உள்ளிட்ட படக்குழுவினர் குழப்பத்தில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X