Thalaivar 170: மும்பையில் இருந்து திரும்பிய ரஜினி... தலைவர் 170 படப்பிடிப்புக்கு திடீர் பிரேக்!!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது தனது 170வது படத்தில் நடித்து வருகிறார்.
லைகா தயாரிப்பில் தசெ ஞானவேல் இயக்கும் இந்தப் படம் தலைவர் 170 என்ற டைட்டிலில் உருவாகி வருகிறது.

இப்படத்தின் ஷூட்டிங் திருவனந்தபுரம், கன்னியாகுமாரி, மும்பையில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், ரஜினி மும்பையில் இருந்து சென்னை திரும்பியதும் தலைவர் 170 படப்பிடிப்புக்கு திடீர் பிரேக் கொடுக்கப்பட்டுள்ளதாம்.
தலைவர் 170 படப்பிடிப்புக்கு திடீர் பிரேக்
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் தசெ ஞானவேல் இயக்கும் தலைவர் 170 படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தில், அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் கடந்த மாதம் திருவனந்தபுரத்தில் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி, நெல்லை ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. அதன்பின்னர் மும்பை சென்ற ரஜினி, அமிதாப் பச்சன் உடனான காட்சிகளில் நடித்திருந்தார். அப்போது தலைவர் 170 ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினியும் அமிதாப் பச்சனும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகின. மும்பையில் 3 நாட்கள் மட்டுமே தலைவர் 170 படப்பிடிப்பு நடந்ததாக சொல்லப்படுகிறது.
இதனையடுத்து மும்பையில் இருந்து சென்னை திரும்பிய சூப்பர் ஸ்டார், தற்போது ஓய்வெடுத்து வருகிறாராம். அதுமட்டும் இல்லாமல் தலைவர் 170 படப்பிடிப்புக்கு திடீரென பிரேக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் சில தினங்களில் தீபாவளி வரவிருப்பதால், படக்குழுவினருக்கு ரெஸ்ட் கொடுக்கும் வகையில் ஷூட்டிங்கை ஒத்தி வைத்துள்ளாராம் இயக்குநர்.
இதனால் சூப்பர் ஸ்டார் ரஜினியும் சென்னையில் உள்ள தனது வீட்டில் ஓய்வெடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. தீபாவளிக்குப் பின்னர் மீண்டும் நெல்லை பகுதிகளில் தலைவர் 170 ஷூட்டிங் தொடங்கும் எனவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம் தீபாவளிக்குப் பின்னர் தொடங்கும் தலைவர் 170 ஷூட்டிங் ஒரேகட்டமாக நடைபெறும் எனத் தெரிகிறது.
டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்திற்குள் தலைவர் 170 படப்பிடிப்பை முடித்துவிட்டு, விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளைத் தொடங்க தசெ ஞானவேல் பிளான் செய்துள்ளாராம்.


Click it and Unblock the Notifications











