Thalaivar 170: தலைவர் 170 ஃபர்ஸ்ட் லுக் ரெடி... ரஜினியின் மாஸ் அவதார் இதுதானா..? சீக்ரெட் அப்டேட்

சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் இந்தாண்டின் முதல் இண்டஸ்ட்ரி ஹிட் படமாக அமைந்தது.

அதனைத் தொடர்ந்து தற்போது தசெ ஞானவேல் இயக்கும் தலைவர் 170 படத்தில் நடிக்க ரெடியாகிவிட்டார்.

Thalaivar 170: Rajinis Thalaivar 170 first look poster is expected to be released on October 4

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் ரஜினியுடன் நடிக்கவுள்ளவர்கள் பற்றிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில், தலைவர் 170 படத்தின் ரஜினியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பற்றி செம்ம மாஸ்ஸான அப்டேட் கிடைத்துள்ளது.

தலைவர் 170ல் ரஜினியின் மாஸ் அவதார்
ஜெயிலர் வெளியாகும் முன்பே லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் இரண்டு படங்களில் கமிட்டானார் சூப்பர் ஸ்டார். அதில், அதில் ஒன்றான லால் சலாம், ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டதோடு, 2024 பொங்கலுக்கு ரிலீஸாகும் எனவும் படக்குழு அறிவித்துவிட்டது. லால் சலாம் படத்தில் ரஜினி கேமியோ ரோலில் நடித்துள்ளார்.

Thalaivar 170: Rajinis Thalaivar 170 first look poster is expected to be released on October 4

இதனையடுத்து லைகா தயாரிக்கும் தலைவர் 170 படத்திற்காக ரெடியாகிவிட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினி. சூர்யாவின் 'ஜெய்பீம்' மூலம் பிரபலமான தசெ ஞானவேல், தலைவர் 170 படத்தை இயக்கவுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினி, தசெ ஞானவேல், லைகா, அனிருத் கூட்டணியில் உருவாகும் தலைவர் 170 படத்துக்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்தப் படத்தில் ரஜினியின் கேரக்டர் பற்றி ஏற்கனவே சில தகவல்கள் வெளியாகின.

அதன்படி, தலைவர் 170ல் ஓய்வுப்பெற்ற போலீஸ் ஆபிஸர் கேரக்டரில் ரஜினி நடிப்பதாக சொல்லப்படுகிறது. அதேபோல், ரஜினி முஸ்லிம் பெயர் கொண்ட கேரக்டரில் நடிக்கவிருப்பதும் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இந்நிலையில், நேற்று முதல் தலைவர் 170 ஸ்குவாட் அப்டேட்களை லைகா புரொடக்‌ஷன்ஸ் வெளியிட்டு வருகிறது. அதாவது தலைவர் 170 படத்தில் ரஜினியுடன் நடிப்பவர்கள், டெக்னிக்கல் டீமில் இணைந்தவர்கள் யார் என அறிவிப்பு வெளியாகிறது.

Thalaivar 170: Rajinis Thalaivar 170 first look poster is expected to be released on October 4

அதன்படி, நேற்று வெளியான முதல் அப்டேட்டில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன், இயக்குநர் தசெ ஞானவேல், இசையமைப்பாளர் அனிருத் என, இந்த மூன்று பேருக்கான போஸ்டரை மட்டும் லைகா வெளியிட்டது. அடுத்தடுத்த அப்டேட்கள் இன்று வெளியாகும் என அறிவித்திருந்தது. அந்த வரிசையில் இன்றைய முதல் அப்டேட்டாக தலைவர் 170 படத்தில் துஷாரா விஜயன் இணந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து மேலும் சில தகவல்கள் வெளியாகவுள்ளன.

இதனிடையே தலைவர் 170 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பற்றிய சீக்ரெட் அப்டேட் தற்போது கிடைத்துள்ளது. அதன்படி, தலைவர் 170 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அக்.4ம் தேதி வெளியாகும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ரஜினி போலீஸ் கெட்டப்பில் இருப்பார் எனவும் சொல்லப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு செம்ம ஹைப் கொடுக்கும் விதமாக தலைவர் 170 ஃபர்ஸ்ட் லுக் உருவாகியுள்ளது எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X