Thalaivar 170: ரஜினியின் போஸ்டருடன் தலைவர் 170 அப்டேட்... Young லுக்கில் மிரட்டும் சூப்பர் ஸ்டார்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது தலைவர் 170 படத்தில் நடிக்கவுள்ளார்.

லைகா தயாரிப்பில் தசெ ஞானவேல் இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது.

இதனையடுத்து தலைவர் 170 டீம் என்ற டைட்டிலில், இந்தப் படத்தில் இணைந்துள்ள நடிகர்கள், நடிகைகள் பற்றிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டது.

 Thalaivar 170: Rajinis Thalaivar 170 new look poster released now

இதில், இறுதியாக செம்ம மாஸ்ஸான லுக்கில் இருக்கும் ரஜினியின் போஸ்டரை வெளியிட்டு மாஸ் காட்டியுள்ளது தலைவர் 170 டீம்.

Young லுக்கில் மிரட்டும் சூப்பர் ஸ்டார்!
கடந்த இரு தினங்களாக ரசிகர்களுக்கு தலைவர் 170 ட்ரீட் கொடுத்து வருகிறது லைகா புரொடக்‌ஷன்ஸ். ஜெயிலரைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கவுள்ள தலைவர் 170 படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. சூர்யாவின் 'ஜெய்பீம்' படம் மூலம் பிரபலமான தசெ ஞானவேல், தலைவர் 170-ஐ இயக்குகிறார். இந்தப் படம் குறித்து ஏற்கனவே அபிஸியலாக அப்டேட் வெளியாகியிருந்தது.

அதன் தொடர்ச்சியாக கடந்த இருதினங்களாக தலைவர் 170 டீம் பற்றி அறிவிப்பு வெளியானது. லைகா, தசெ ஞானவேல், அனிருத் ஆகியோருக்கு அடுத்தபடியாக, தலைவர் 170 படத்தில் துஷாரா விஜயன் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்தது. மேலும் ரித்திகா சிங், மஞ்சு வாரியர் ஆகியோரும் லீட் ரோலில் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர் என மூன்று நடிகைகள் என்றாலும், அவர்கள் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறார்களா எனத் தெரியவில்லை.

 Thalaivar 170: Rajinis Thalaivar 170 new look poster released now

இதனையடுத்து நேற்றும் தலைவர் 170 படத்தின் அப்டேட்கள் வெளியாகின. அதன்படி, டோலிவுட் நடிகர் ராணா, மல்லுவுட்டில் இருந்து ஃபஹத் பாசில், பாலிவுட் சூப்பர் அமிதாப் பச்சன் ஆகியோரும் தலைவர் 170 படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு அபிஸியலாக அறிவித்தது. ஜெயிலரில் சிவ ராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், மோகன்லால் என மூன்று மொழிகளில் இருந்து பெருந்தலைகளை களமிறக்கினார் ரஜினி.

தற்போது அதே ஃபார்முலாவில் தலைவர் 170 படத்திலும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப், மலையாளத்தில் வெரைட்டியாக மிரட்டும் ஃபஹத் பாசில், தெலுங்கில் இருந்து ராணா ஆகியோரை தலைவர் 170 வண்டியில் ஏற்றியுள்ளனர். கமலின் விக்ரம் படத்தில் தொடங்கிய மல்டி ஸ்டார்ஸ் மோகம், ஜெயிலர், லியோ என இப்போது தலைவர் 170 படத்திலும் தொடர்கிறது.

இந்நிலையில், இன்றும் தலைவர் 170 அபிஸியல் அப்டேட் வெளியாகியுள்ளது. அதில், சூப்பர் ஸ்டார் ரஜினியின் போஸ்டரை வெளியிட்டுள்ள படக்குழு, விரைவில் தலைவர் 170 ஷூட்டிங் தொடங்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது. முக்கியமாக ரஜினியின் மிக இளமையான தோற்றத்தில் வெளியாகியுள்ள இந்த தலைவர் 170 போஸ்டரில், சூப்பர் ஸ்டாரின் ஹேர் ஸ்டைல் செம்ம மாஸ்ஸாக உள்ளது. சிவாஜி படத்திற்குப் பிறகு ரஜினியின் ஹேர்ஸ்டைல் இதில் அதிகம் கவனம் ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X