Thalaivar 170: சைலண்டாக நடந்த தலைவர் 170 பூஜை... கெத்தாக என்ட்ரியான சூப்பர் ஸ்டார்!

சென்னை: ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து ரஜினியின் லால் சலாம் விரைவில் வெளியாகவுள்ளது.

லால் சலாம் படத்தை தொடர்ந்து ரஜினியின் 170 படத்தையும் லைகா நிறுவனமே தயாரிக்கிறது.

'ஜெய்பீம்' புகழ் தசெ ஞானவேல் இயக்கவுள்ள 'தலைவர் 170' படப்பிடிப்பு செப்டம்பரில் தொடங்கவுள்ளதாம்.

இந்நிலையில், தலைவர் 170 பூஜை இன்று சைலண்டாக நடந்து முடிந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

 Thalaivar 170: Rajinis Thalaivar 170 pooja happening at Leela Palace today

சைலண்டாக நடந்த தலைவர் 170 பூஜை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியான ஜெயிலர் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கிய இந்தப் படம் இரண்டு வாரங்களில் 525 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதனால் உற்சாகமான சூப்பர் ஸ்டார், தனது 170 படத்திற்கு கால்ஷீட் கொடுத்துவிட்டார். லைகா தயாரிப்பில் உருவாகவுள்ள தலைவர் 170 படத்தை தசெ ஞானவேல் இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜெயிலரில் நடித்துக் கொண்டிருக்கும் போதே லைகா தயாரிப்பில் இரண்டு படங்களில் நடிக்க கமிட்டானார் ரஜினி. அதன்படி, இதில் முதலாவதாக லால் சலாம் படத்தின் ஷூட்டிங் நடந்துமுடிந்துவிட்டது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார் சூப்பர் ஸ்டார். தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருப்பதால், விரைவில் லால் சலாம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து தலைவர் 170 படத்தில் நடிக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரெடியாகிவிட்டார். 'ஜெய்பீம்' புகழ் தசெ ஞானவேல் இயக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தலைவர் 170 படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகளை முடித்துவிட்ட ஞானவேல், அடுத்த மாதம் படப்பிடிப்பை தொடங்க முடிவு செய்துள்ளாராம். இதனையடுத்து இன்று தலைவர் 170 பூஜை போடப்பட்டது.

சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற்ற தலைவர் 170 பூஜையில், ரஜினி, லைகா சுபாஸ்கரன், இயக்குநர் தசெ ஞானவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டதாக தெரிகிறது. நேற்றைய தினம் நடைபெற்ற சந்திரமுகி 2 இசை வெளியீட்டு விழாவுக்காக சென்னை வந்திருந்தார் லைகா சுபாஸ்கரன். அப்போது அஜித்தின் விடாமுயற்சி அப்டேட் கொடுத்த சுபாஸ்கரன், இன்று தலைவர் 170 படத்துக்கு பூஜை போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், நேற்று ஜெயிலர் சக்சஸ் பார்ட்டியை கொண்டாடினார் ரஜினிகாந்த். அப்படியே அதே வைபில் தலைவர் 170 பூஜையில் கலந்துகொண்டுள்ளார். தலைவர் 170 படமும் 'ஜெய்பீம்' போல சமூகத்துக்கான முக்கியத்துவம் உள்ளதாக இருக்கும் என சொல்லப்படுகிறது. அதாவது மரண தண்டனைக்கு எதிராக போராடும் ஓய்வுப் பெற்ற போலீஸ் ஆபிஸர் கேரக்டரில் ரஜினி நடிக்கவுள்ளாராம். மேலும், இதில் முஸ்லிம் கேரக்டரில் ரஜினி நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதேநேரம் இந்தப் படத்தின் டைட்டில் 'வேட்டையன்' எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் படத்தில் ரஜினியுடன் நானி, அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், மஞ்சு வாரியர் ஆகியோர் நடிப்பதும் உறுதியாகியுள்ளது. ஃபஹத் பாசில், அமிதாப்பச்சன் இருவரும் ரஜினிக்கு வில்லனாக நடிப்பதாக சொல்லப்படுகிறது. தலைவர் 170 படத்தின் மொத்த படப்பிடிப்பையும் இந்தாண்டு இறுதிக்குள் முடித்துவிட்டு, 2024 சம்மரில் ரிலீஸ் செய்ய லைகா பிளான் செய்துள்ளதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X