Thalaivar 170: “ரஜினியின் தலைவர் 170 Squad..” அபிஸியல் அப்டேட் ரெடி... லீட் கொடுத்த லைகா!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் கடந்த மாதம் வெளியாகி இண்டஸ்ட்ரி ஹிட் அடித்தது.

ஜெயிலர் வெற்றியைத் தொடர்ந்து லைகா தயாரிக்கும் தலைவர் 170 படத்தில் நடிக்கவுள்ளார்.

ரஜினியின் தலைவர் 170 படத்தை 'ஜெய்பீம்' புகழ் தசெ ஞானவேல் இயக்குகிறார்.

விரைவில் ஷூட்டிங் தொடங்கவுள்ள தலைவர் 170 அபிஸியல் அப்டேட்ஸ் நாளை (அக்.1) முதல் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

 Thalaivar 170: Rajinis Thalaivar 170 Squad announcement begins tomorrow

ரஜினியின் தலைவர் 170 Squad: சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியான ஜெயிலர் ப்ளாக் பஸ்டர் ஹிட்டானது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கிய இந்தப் படம் மொத்தமாக 600 கோடி ரூபாய் வரை வசூலித்தது. இதனைத் தொடர்ந்து தனது 170 படத்தில் நடிக்க ரெடியாகிவிட்டார் ரஜினி. தசெ ஞானவேல் இயக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

லைகா தயாரிப்பில் இரண்டு படங்களில் நடிக்க கமிட்டானர் ரஜினி. அதன்படி, இதில் முதலாவதாக தனது மகள் ஐஸ்வர்யா இயக்கிய லால் சலாம் படத்தில் நடித்து முடித்துவிட்டார். மொய்தீன் பாய் என்ற கேமியோ ரோலில் ரஜினி நடித்துள்ள லால் சலாம் திரைப்படம், விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னொரு பக்கம் தலைவர் 170 படத்தின் ஷூட்டிங்கை தொடங்க படக்குழு ரெடியாகிவிட்டது.

கடந்த மாதம் இறுதியில் தலைவர் 170 படத்தின் பூஜை சென்னையில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர விடுதியில் சைலண்டாக நடந்து முடிந்தது. இதன் தொடர்ச்சியாக அக்டோபர் முதல் வாரத்திலிருந்து தலைவர் 170 படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாம். தலைவர் 170 ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகளை முடித்துவிட்ட ஞானவேல், இந்தப் படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள், நடிகைகளையும் கன்ஃபார்ம் செய்துவிட்டாராம்.

இந்த அப்டேட் அனைத்தும் அபிஸியலாக வெளியாகும் என லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. நாளை முதல் வெளியாகும் இந்த அறிவிப்பில் தலைவர் 170ல் ரஜினியுடன் நடிப்பவர்கள் உட்பட டெக்னிக்கல் டீம் பற்றிய அப்டேட்டும் வெளியாகிறதாம். அதன்படி அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், மஞ்சு வாரியர் ஆகியோர் தலைவர் 170 படத்தில் கமிட்டாகியுள்ளார்களா இல்லையா என்பது விரைவில் தெரியவரும்.

அதேபோல் தலைவர் 170ல் அனிருத் இசையமைப்பாளராக கமிட்டாகியுள்ளார். அவரைத் தொடர்ந்து மற்ற டெக்னிக்கல் டீம் பற்றிய அப்டேட்டும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தலைவர் 170 படத்தில் ரஜினி மரண தண்டனைக்கு எதிராக போராடும் ஓய்வுப் பெற்ற போலீஸ் ஆபிஸர் கேரக்டரில் நடிக்கவுள்ளாராம். மேலும், இந்தப் படத்தின் டைட்டில் வேட்டையன் என்றும், இதில் முஸ்லிம் கேரக்டரில் ரஜினி நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X