Thalaivar 170: “தலைவர் 170 Squad..” ரஜினி ரசிகர்களுக்கு ஹைப் கொடுத்து ஏமாற்றிய லைகா!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரேநேரத்தில் இரண்டு படங்களில் கமிட்டாகியுள்ளார்.

இதில் ரஜினியின் 170வது படத்தை லைகாவும், 171வது படத்தை சன் பிக்சர்ஸும் தயாரிக்கின்றன.

Thalaivar 170: Rajinis Thalaivar 170 Squad Today announcement

லைகா தயாரிக்கும் தலைவர் 170 படத்தை தசெ ஞானவேல் இயக்கவுள்ளார்.

இந்தப் படத்தின் அபிஸியல் அப்டேட் இன்று முதல் வெளியாகும் என அறிவித்த லைகா, ரசிகர்களுக்கு ஹைப் கொடுத்து ஏமாற்றியுள்ளது.

ரசிகர்களை ஏமாற்றிய லைகா
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் இரண்டு படங்களில் கமிட்டாகியிருந்தார். இந்த இரண்டு படங்களில் ஒன்றான லால் சலாம், ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகியுள்ளது. லால் சலாம் என்ற டைட்டில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. முக்கியமாக லால் சலாமில் ரஜினி, மொய்தீன் பாய் என்ற கேமியோ ரோலில் மட்டுமே நடித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து இன்னொரு படமான தலைவர் 170, தசெ ஞானவேல் இயக்கவுள்ளார். சூர்யாவின் 'ஜெய்பீம்' படம் மூலம் பிரபலமான தசெ ஞானவேல், ரஜினியுடன் முதன்முறையாக இணைந்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினி, தசெ ஞானவேல், லைகா கூட்டணியில் உருவாகும் தலைவர் 170 படத்தின் டைட்டில் இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதேநேரம் ஆகஸ்ட் மாதம் இறுதியிலேயே தலைவர் 170 படத்துக்காக பூஜை போடப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக இந்த மாதம் முதல் வாரத்திலிருந்து தலைவர் 170 படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாம். தலைவர் 170 ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகளை முடித்துவிட்ட ஞானவேல், படக்குழுவினரையும் கன்ஃபார்ம் செய்துவிட்டார். இதனால் எப்போது வேண்டுமானாலும் தலைவர் 170 அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பை லைகா நிறுவனமும் திடீரென எகிற வைத்தது.

அதன்படி, இன்று முதல் தலைவர் 171 படத்தின் ஸ்குவாட் பற்றி அப்டேட் வெளியாகும் என லைகா நிறுவனம் நேற்று அறிவித்திருந்தது. தலைவர் 170ல் ரஜினியுடன் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் உட்பட டெக்னிக்கல் டீம் பற்றிய தகவல்கள் வெளியாகும் என அறிவித்தது. இதனால் தலைவரின் ரசிகர்கள் கடும் உற்சாகத்தில் இருந்தனர். ஆனால், தலைவர் 170 ஸ்குவாட் என சொல்லிவிட்டு, பழைய அப்டேட்டை மட்டும் கொடுத்து ஏமாற்றியுள்ளது லைகா.

அதாவது தலைவர் 170 படத்தின் தயாரிப்பாளர் சுபாஸ்கரன், இயக்குநர் தசெ ஞானவேல், இசையமைப்பாளர் அனிருத் என, இந்த மூன்று பேருக்கான போஸ்டரை மட்டும் லைகா வெளியிட்டுள்ளது. தலைவர் 170 படத்தின் அபிஸியல் அப்டேட் வெளியானபோதே, இதெல்லாம் உறுதியானது தானே என ரசிகர்கள் நொந்துபோயுள்ளனர். எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவது போல, லைகாவின் டிவிட்டர் பதிவும் ரசிகர்களை கடுப்பேற்றியுள்ளது.

அதில், தலைவர் 170 படத்தில் இருந்து இன்று வெளியான அப்டேட்கள் சண்டே விருந்தாக அமைந்திருக்கும். மேலும் பல அப்டேட்களை நாளை முதல் பார்க்கலாம் என குறிப்பிட்டுள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள் இப்படியெல்லாம் கிரிஞ் அப்டேட் கொடுத்து ஏமாற்ற வேண்டாம் என லைகா நிறுவனத்தை பங்கமாக கலாய்த்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X