Thalaivar 170: விடாமுயற்சி தான் அப்படின்னா தலைவர் 170-க்கும் சிக்கலா?: சைலண்ட் மோடில் ரஜினி!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படப்பிடிப்பு கடந்த வாரம் முடிவுக்கு வந்தது.

அதனைத் தொடர்ந்து தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார்.

லால் சலாம் ஷூட்டிங் முடிந்ததும் தசெ ஞானவேல் இயக்கும் தலைவர் 170 படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அஜித்தின் விடாமுயற்சி போல தலைவர் 170 பட ஷூட்டிங் தொடங்குவதிலும் சிக்கல் இருப்பதாக சொல்லப்படுகிறது.

 Thalaivar 170: Superstar Rajinikanths Thalaivar 170 delayed in shooting start

தலைவர் 170 படத்துக்கு வந்த சிக்கல்:சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு புதுவையில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்ற ரஜினியை பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நள்ளிரவு நேரத்தில் திரண்ட வீடியோ வைரலாகி இருந்தது.

முன்னதாக நெல்சன் இயக்கிய ஜெயிலர் படத்தில் நடித்து வந்தார் ரஜினி. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் தான் முடிவுக்கு வந்தது. அதேபோல், லால் சலாம் படத்தின் படப்பிடிப்பும் விரைவில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. அதனால், விரைவில் ரஜினியின் போர்ஷன் மட்டும் நிறைவுபெறும் என சொல்லப்படுகிறது.

லைகா தயாரிப்பில் லால் சலாம் உட்பட இன்னொரு படத்திலும் கமிட்டாகியுள்ளார் ரஜினி. தலைவர் 170 என்ற டைட்டிலில் உருவாகும் இப்படத்தை தசெ ஞானவேல் இயக்கவுள்ளார். 'ஜெய்பீம்' படம் மூலம் பிரபலமான தசெ ஞானவேல், சூப்பர் ஸ்டாருக்காக செம்ம மாஸ்ஸான கதையை ரெடி செய்துள்ளாராம். இதனால், லால் சலாம் முடிந்ததுமே தலைவர் 170 படப்பிடிப்பில் கலந்துகொள்ள ரெடியாக இருந்தார் ரஜினி.

ஆனால், இன்னும் தலைவர் 170 ஷூட்டிங் பற்றி தயாரிப்பு தயாரிப்பில் இருந்து அப்டேட் எதுவும் வெளியாகவில்லையாம். லைகா தயாரித்த பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால், இந்தப் படத்தின் வசூல் பாக்ஸ் ஆபிஸில் ஏமாற்றம்கண்ட நிலையில், லைகா அலுவலகங்களில் ஐடி ரெய்டும் நடந்தது. இதனால் ரொம்பவே அப்செட்டான லைகா & டீம் தலைவர் 170 படப்பிடிப்பை எப்போது தொடங்குவது எனத் தெரியாமல் விழி பிதுங்குகிறாம்.

 Thalaivar 170: Superstar Rajinikanths Thalaivar 170 delayed in shooting start

இன்னொரு பக்கம் அஜித்தின் விடாமுயற்சி படத்தையும் லைகா நிறுவனம் தான் தயாரிக்கிறது. மகிழ் திருமேனி இயக்கும் இப்படத்தின் ஷூட்டிங்கும் இன்னும் தொடங்கவில்லை. இதற்கும் லைகா நிறுவனங்களில் நடந்த ஐடி ரெய்டு தான் காரணம் என சொல்லப்படுகிறது. விடாமுயற்சியை தொடர்ந்து ரஜினியின் தலைவர் 170 படத்தின் ஷூட்டிங் தொடங்கவும் தாமதமாகும் என எதிர்பார்கப்படுகிறது.

இதனால், சூப்பர் ஸ்டார் ரஜினியும் இப்போது சைலண்ட் மோடுக்கு சென்றுவிட்டாராம். ஆனாலும், விடாமுயற்சி, தலைவர் 170 படங்களின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி தொடங்க உள்ளதாக லைகா தரப்பில் இருந்து தெரியவந்துள்ளது. அதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X