Thalaivar 170: ’வேட்டையன்’ குறி வச்சா இரை விழணும்.. தலைவர் 170 படத்தின் தாறுமாறான டீசர் ரிலீஸ்!

சென்னை: ஜெய்பீம் இயக்குநர் த.செ. ஞனாவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், பகத் ஃபாசில், ரித்திகா சிங் மற்றும் துஷாரா விஜயன் உள்ளிட்ட பிரபலங்கள் நடிப்பில் உருவாகி வரும் தலைவர் 170 படத்தின் டைட்டில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு வீடியோவுடன் தலைவர் 170 படத்தின் தாறுமாறு அப்டேட் வெளியாகி உள்ளது.

Des: Supestar Rajinikanths Thalaivar 170 movie title revealed now by Lyca Production on the occasion of Rajinikanth birthday.

ஜெயிலர் தந்த வெற்றி: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான ஜெயிலர் படத்தை நெல்சன் இயக்கி மீண்டும் ரஜினி ராஜ்யத்தை தமிழ் சினிமாவில் கொண்டு வந்துள்ளார். காலா, தர்பார், அண்ணாத்த உள்ளிட்ட படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், ஜெயிலர் படம் 600 கோடி வசூல் சாதனையை படைத்து இண்டஸ்ட்ரி ஹிட் அடித்துள்ளது.

தலைவர் 170 டைட்டில்: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி உள்ள லால் சலாம் படம் வரும் பொங்கலுக்கு வெளியாக போகிறது. அடுத்ததாக த.செ. ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பகத் ஃபாசில், ரித்திகா சிங் மற்றும் துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் தலைவர் 170 படத்திற்கு வேட்டையன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. போலீஸ் அதிகாரியாக இந்த படத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். “குறி வச்சா இரை விழணும் என ரஜினி பேசும் பஞ்ச் வசனம் மற்றும் அந்த கண்ணாடி கூலர்ஸாக மாறுவது வேறலெவல்.

கொண்டாட்டத்தில் ரசிகர்கள்: ஜெய்பீம் படத்தை விட தலைவர் 170 படத்தில் வலிமையான திரைக்கதை இருக்கும் என்பது தற்போது உறுதியாகி உள்ளது. ஜெயிலர் படத்தை போலவே இந்த படமும் பான் இந்தியா படமாகவும் மல்டி ஸ்டாரர்கள் நிறைந்துள்ள நிலையில், மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தும் என்றும் தெரிகிறது. அடுத்து தலைவர் 171 அப்டேட் வருமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X