ஏதேதோ அப்டேட் வருது.. AK62 மட்டும் வர மாட்டேங்குது.. தலைவர் 170 அப்டேட்டால் அஜித் ரசிகர்கள் அப்செட்!

சென்னை: தலைவர் 170வது படத்தை ஜெய்பீம் படத்தின் இயக்குநர் டி.ஜே. ஞானவேல் இயக்குகிறார் என்கிற ஹாட் அப்டேட்டை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள நிலையில், ஒரு கூட்டம் மட்டும் ரொம்பவே அப்செட் ஆகி உள்ளது.

அது வேற யாரும் இல்லை அஜித் ரசிகர்கள் தான். ஆம், பிப்ரவரி மாதத்தின் துவக்கத்தில் விஜய்யின் லியோ படத்தின் அறிவிப்புகள் வெளியாகி, அந்த படத்தின் காஷ்மீர் ஷெட்யூலையே முடித்து விட்டு படக்குழுவினர் சென்னை திரும்பி விட்டனர்.

ஆனால், விக்னேஷ் சிவன் பஞ்சாயத்துக் காரணமாக இன்னமும் அஜித்தின் ஏகே 62 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா வெளியிடவில்லை.

லைகாவுடன் 2 படங்கள்

லைகாவுடன் 2 படங்கள்

லைகா தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படம் சொதப்பிய நிலையில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து அண்ணாத்த மற்றும் ஜெயிலர் என இரு படங்களில் நடிக்க சம்மதித்தார் ரஜினிகாந்த். சமீபத்தில், லைகா நிறுவனத்துடன் மீண்டும் 2 படங்களில் ரஜினி நடிக்கப் போவதாக அறிவிப்புகள் வெளியான நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லால் சலாம் படத்திலும் கேமியோ ரோலிலும், இன்னொரு படத்தில் ஹீரோவாகவும் ரஜினிகாந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

தலைவர் 170 இயக்குநர்

தலைவர் 170 இயக்குநர்

சூர்யாவை வைத்து ஜெய்பீம் எனும் படத்தை இயக்கி உலகளவில் பாராட்டுக்களை அள்ளிய இயக்குநர் ஞானவேல் அடுத்ததாக ரஜினிகாந்தின் 170வது படத்தை லைகா நிறுவனம் தயாரிப்பில் இயக்கப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. ஜெய்பீம் படத்தை போலவே இந்த படமும் விருதுகளை குவிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பை எகிற விட்டு வருகின்றனர்.

அஜித் ரசிகர்கள் அப்செட்

அஜித் ரசிகர்கள் அப்செட்

ரஜினிகாந்த் ரசிகர்கள் மகிழ்ச்சியின் வெள்ளத்தில் இருக்கும் இதே வேளையில், இன்னொரு புறம் அஜித் ரசிகர்கள், அப்போ இப்பவும் எங்க ஏகே 62 படத்துக்கு எந்தவொரு சின்ன அப்டேட் கூட இல்லை என மனவேதனையில் வாடியபடி ஏகப்பட்ட கமெண்ட்டுகளை தலைவர் 170 அப்டேட் ட்வீட்டுக்கு கீழ் பதிவிட்டு வருகின்றனர்.

வெறுப்பேற்றும் லைகா

வெறுப்பேற்றும் லைகா

லைகா நிறுவனம் பல திரைப்படங்களை தமிழில் தயாரித்து வரும் நிலையில், ஒவ்வொரு படத்தின் அப்டேட்களாக சமீப காலமாக வெளியிட்டு வருகிறது. பொன்னியின் செல்வன் 2 க்ளிம்ஸ் நேற்று வெளியான போது கூட அஜித் ரசிகர்கள் கவலை அடைந்தனர். இந்நிலையில், பிக் அனவுன்ஸ்மென்ட் என லைகா சொன்னதுமே அஜித் பட அறிவிப்பு தான் என காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

தண்ணியில மீன் அழுதா

தண்ணியில மீன் அழுதா

தண்ணியில மீன் அழுதா.. கரைக்கு ஒரு தகவலும் வருவதில்லை என சோகத்தின் உச்சிக்கே சென்று அஜித் ரசிகர்கள் ஏகே 62 அப்டேட்டை சீக்கிரம் விடுங்க லைகா என கதறி வருகின்றனர். அடுத்த வாரம் அஜித்தின் ஏகே 62 அறிவிப்புகள் வெளியாகும் என்கிற ஆறுதல் ட்விட்டையாவது போட்டு விடுங்க பாஸ் என்றும் ரசிகர்கள் கெஞ்சி வருகின்றனர்.

ஏதேதோ அப்டேட் வருது

ஏதேதோ அப்டேட் வருது

"ஏதேதோ அப்டேட் வருது, AK62 மட்டும் வர மாட்டேங்குது" என ரசிகர்கள் கமெண்ட் போட்டு அஜித்தின் ஏகே 62 படத்தின் அப்டேட் கிடைக்காத விரக்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X